உலகமே கலாய்க்கும் troll படம் ‘பீஸ்ட்‘… நெல்சனை விடாமல் கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ் !

சென்னை : நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் தோல்வி அடைந்ததால், பீஸ்ட் படத்தை குறித்து மீம்ஸ் போட்டு சோசியல் மீடியாவில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஏப்ரல் 13ந் தேதி வெளியானத்திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் ,யோகிபாபு, ஷான் டாம் சாக்கோ, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

நெல்சன் திலீப்குமார்

நெல்சன் திலீப்குமார்

கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். நயன்தாரா நடிப்பில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து வெற்றியை வாரிக்குவித்தது. இதையடுத்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு டாக்டர் படம் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலில் சாதனைபடைத்தது.

தரமான பாடல்கள்

தரமான பாடல்கள்

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு தளபதியின் பீஸ்ட் திரைப்படம் வெளியானதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து. அதுமட்டும் இல்லாமல், அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கான போன்ற பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான ஆவலை மேலும் தூண்டின. .

நெகட்டிவ் கருத்து

நெகட்டிவ் கருத்து

இதையடுத்து, ஏப்ரல் 13ந் தேதி படம் வெளியானது இதில் விஜய் வீரராகவன் என்ற ரோலில் நடித்திருந்தார். பாகிஸ்தான் தீவிரவாதியை விடுதலை செய்யக்கோரி ஒரு மால்லை தீவிரவாதிகள் ஹைஜாக் செய்கின்றனர். இந்த மாலுக்கும் எதர்ச்சையாக வரும் விஜய் பிணைக்கைதிகளாக இருக்கும் பொதுமக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதை. இந்த படத்தின் டிரைலர் வெளியான போதே இது என்ன... யோகிபாபு நடத்த கூர்க்கா படம் போல இருக்கு என்று கருத்து தெரிவித்தனர்.

பெரும் ஏமாற்றம்

பெரும் ஏமாற்றம்

பீஸ்ட் படத்தைப் பார்த்த பல ரசிகர்களுக்கு இத்திரைப்படம் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது என்று சொல்லாம். இந்த கதையை கேப்டன் விஜய்காந்தே 20வருடத்திற்கு முன்னாடி நடித்துவிட்டார் என்றும், படத்தில் ஹீரோ, பாட்டு, சண்டை, எடிட்டிங், மெகா தயாரிப்பு என எல்லாம் இருந்தும் இயக்குனர் மட்டும் படத்தில் இல்லை என்று பலர் இணையத்தில் பங்கமாக கலாய்த்தனர்.

உலக அளவில் டிராண்ட்

உலக அளவில் டிராண்ட்

கடந்த வாரம் இத்திரைப்படம் ஓடிடியில் இந்தி, தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. இத்திரைப்படத்தை பார்த்த, ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை விமானி சிவராமன் சஜ்ஜன், கிளைமாக்ஸில் விஜன் தன்னந்தனியாக பாகிஸ்தானுக்கு ஜெட் விமானத்தில் சென்றது குறித்து பங்கமாக கலாய்த்து இருந்தார். இது உலக அளவில் ட்ராண்டானது.

உலகம் கலாய்க்கும் troll படம்

உலகம் கலாய்க்கும் troll படம்

நெல்சனை எவ்வளவு கலாய்க்க முடியுமே அவ்வளவு கலாய்ச்சாச்சு இருந்தாலும் இன்னும் சில நெட்டிசன்ஸ்கள் அவரை விடாது கிண்டலடித்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு நெட்டிசன்ஸ், உலகம் கொண்டாடும் Pan World படமா எடுக்க நினைச்சேன். ஆனால், உலகம் கலாய்க்கும் Troll Material படம் மாறிடுச்சு என்று நெல்சனை கிண்டடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X