பருத்திவீரன் மாதிரி இருக்கே.. வசனத்தை கூட மாத்தல.. விருமன் பாடல் ப்ரோமோ.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ் !
சென்னை : விருமன் படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியானது. இந்த பாடலை பார்த்த ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
விருமன் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள படக்குழு, ஜூலை மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.

விருமன்
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் விருமன். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
காஞ்ச பூ கண்ணால
இப்படத்தின் முதல் சிங்கிள் காஞ்ச பூ கண்ணால பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலுக்கு கருமாத்தூர் மணிமாறன் வரிகளில் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். கிராமத்து காதல் பாடலாக உருவாகியுள்ள இப்பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது பலரின் கவனத்தை பெற்று வருகிறது.

பருத்திவீரன்
காஞ்ச பூ கண்ணால பாடல் ரசிக்கும்படி இருந்தாலும், அந்த பாடலில் வரும் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கரை பார்க்கும் போது பருத்திவீரன் படத்தை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். கார்த்தியின் நடை, உடை எல்லாம் பருத்திவீரன் படத்தில் வருவதுபோல இருக்கு என்று கூறி வருகின்றனர்.

வசனத்தைக்கூட மாத்தல
மேலும், பருத்திவீரன் படத்தில் பிரியாமணியை ஹே முத்தழகு என கூப்பிடுவார். அதே போல, காஞ்ச பூ கண்ணால பாடலிலும் கார்த்தி அதிதியை 'ஹே தேனு' என்று கூப்பிடுவதும், அதிதி ஷங்கர், பிரியாமணி போல பாவாடை தாவணியில் வருவதும், டான்ஸ் ஆடுவதும் பிரியாமணி போல இருக்கு என்றும் பருத்திவீரன் மாதிரி இருக்கே என்றும், வசனத்தை கூட மாத்தல என்று இணையத்தில் நெட்டிசன்ஸ் கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











