எங்க ரியாக்ஷன் சனம் முகத்துல தெரியுது பாருங்க.. அர்ச்சனாவின் மொக்கை கதையை கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸ் ரசிகர்களுக்கு மீண்டுமொரு அர்ச்சனாவை கலாய்த்து தள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
வரும் வியாழன் வரை அர்ச்சனா இங்கே தான் இருக்கப் போகிறேன் என்று சொன்னதும் ரசிகர்கள் டென்ஷன் ஆனாலும், சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ட்ரோல் மீம்கள் குவிந்து வருகிறது.
மேலும், பாலா திடீரென பேபியாகி ஒவ்வொரு அம்மாவுடன் கொஞ்சல்களை வாங்குவதை பார்த்தும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஆரி சிரிக்கிறார்
அர்ச்சனா பேசி, அதுக்கு ஆரி சிரிக்கிறார்.. அதிசயம் ஆனால் உண்மை என அன்சீன் புரமோவை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். வெளியே என்ன நடக்குது, யாரெல்லாம் வஞ்சகத்தோடு விளையாடுறாங்கன்னு எதுவுமே தெரியாமல் இருக்காரு ஆரி என்றும் பரிதாபப்பட்டு வருகின்றனர்.

உருமாறிய கொரோனா
மீண்டும் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்து, கட்டிப்பிடித்து கொண்டாடி வரும் அர்ச்சனா, பாலா, ரம்யா மற்றும் ரியோவை உற்சாகப்படுத்தி வருகிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் உருமாறிய கொரோனா திரும்பி வந்திருக்கு என்று கொஞ்சம் ஓவராகவே கலாய்த்து வருகின்றனர்.

ஆரியை கிண்டல் பண்ணதா
"எது? அர்ச்சனா நீங்களும் ரம்யாவும் சேர்ந்து அந்த பொம்மையை வச்சு உங்க அப்பா அட்வைஸ் மட்டும் தான் கொடுப்பாரு நீ ரொம்ப பாவம்னு ஆரியை கிண்டலடிச்சது தான் உங்களுக்கு ஃபன் டாஸ்க்கா? என்ன ஒரு வில்லத்தனம் என அர்ச்சனாவின் சுய ரூபம் இதுதான் என கிழித்து தொங்கவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

சனம் முகத்துல
"எது அந்த நக்கல் டிராமா பியூட்டிஃபுல்லா இருந்துச்சாம்மா? எங்க ரியக்ஷன் சனம் முகத்தில தெரியுது பாருங்க! உங்க ஃபன்லாம் ரசிக்க உங்களமாறி ஆட்களுக்கு தான் வரும்!" என இந்த பிக்பாஸ் ரசிகரும் அன்சீன் புரமோவை கழுவி கழுவி ஊற்றி வருகிறார். ஆரி மற்றும் சனம் ஷெட்டியின் காட்சிகளை தான் இன்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











