பாசமே இல்லாத அபிஷேக் பச்சன்.. பாவம் ஐஸ்வர்யா ராய்.. புலம்பும் பேன்ஸ்!

சென்னை: உலக அழகி ஐஸ்வர்யா ராயின் 50வது பிறந்த நாளுக்கு அபிஷேக் பச்சன் போட்ட பதிவினைப் பார்த்து ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

ஐஸ்வர்யா ராய் 1994 ஆம் ஆண்டு தனது 21வது வயதில் மிஸ் வேர்ல்ட் என்ற பட்டத்தை பெற்றார். அதன்பிறகு எத்தனையோ பேர் மிஸ் வேர்ல்ட் பட்டத்தை பெற்ற போதும் ஐஸ்வர்யா ராய் அடைந்த புகழை யாரும் தொட முடியவில்லை.

Netizens Trolled abhishek bachchan for Aishwarya rai birthday wish

பட்டம் வாங்கி 20 வருடங்களுக்கு மேலான போதும், இன்று வரை உலக அழகியாக அவர் பெயர் தான் நிலைத்து இருக்கிறது.

உலக அழகி: ஐஸ்வர்யா ராயை திரைத்துறையில் அறிமுகப்படுத்திய பெருமை இயக்குநர் மணிரத்னத்திற்கு உண்டு. அவர் இயக்கிய இருவர் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க வந்த ஐஸ்வர்யா, இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து இன்று வரை டாப் நடிகையாகவே இருக்கிறார்.

ஹிட் படங்களில்: ஐஸ்வர்யா ராய் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் 2 படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த அனைத்துப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. 50 வயதான போதும், பொன்னியின் செல்வன் படத்தில் லீட் ரோலில் நடித்த பெருமை இவருக்கு உண்டு.

Netizens Trolled abhishek bachchan for Aishwarya rai birthday wish

காதல் திருமணம்: பல காதல் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சனின் மகன், அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். அண்மையில் ஐஸ்வர்யா ராய் தனது, 50வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

புலம்பும் பேன்ஸ்: ஆனால், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய்யின் கருப்பு வெள்ளை போட்டோவை போட்டு ஹாப்பி பர்த்டே என்று பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்ஸ், அவரது பிறந்த நாளை ரசிகர்களாகிய நாங்களே கொண்டாடி வருகிறோம். கணவர் நீங்கள் இந்த போட்டோவையா போடுவீங்க, இதெல்லாம் ஒரு வாழ்த்தா, உங்களுக்கு மனைவி மீது பாசமே இல்லையா என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X