டம்மி பீஸ்னு ஒரு வாரத்துலயே கண்டுபிடிச்சிட்டீங்களே.. அபிஷேக் ராஜாவை பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: காசு வாங்கிக் கொண்டு விமர்சிக்கும் விமர்சகர் என ராஜு ஜெயமோகன் பேசிய உடனே பிக் பாஸ் எடிட்டர் அபிஷேக் ராஜாவின் ரியாக்‌ஷனை காண்பிக்க நெட்டிசன்கள் அபிஷேக் ராஜாவை கலாய்த்து வருகின்றனர்.

மேலும், அபிஷேக் ராஜா இன்றைய எபிசோடில் சேவ் ஆகாததை நினைத்து ஒரு வாரத்திலேயே நம்மை பற்றி ரசிகர்கள் புரிந்து கொண்டார்களா? என நினைப்பார் என்றும் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

யூடியூபர் விமர்சகரான அபிஷேக் ராஜா பிக்பாஸ் நிகழ்ச்சியையே மோசமாக விமர்சித்த வீடியோ வைரலானது தான் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாமல் போக காரணம் என கூறப்படுகிறது.

எடிட்டர் குசும்புக்காரன்

எடிட்டர் குசும்புக்காரன்

காசு வாங்கிக் கொண்டு விமர்சிக்கும் விமர்சகர் போல மாறிவிட்டேன் என அக்‌ஷராவுக்கு லைக் போட்டது குறித்து ராஜு ஜெயமோகன் பேசியதும் அபிஷேக் ரெட்டியை கேமரா ஃபோகஸ் செய்த புரமோ வெளியாகி ரசிகர்களை உற்சாகமாக்கி உள்ளது. "எடிட்டர் குசும்புக்காரனா இருப்பான் போலயே கரெக்ட்டா ரியாக்‌ஷனை கேட்ச் பண்றான்" என ட்ரோல் செய்து வருகின்றனர்.

நாங்க சொல்லல

நாங்க சொல்லல

"அபிஷேக்.. ராஜு சொன்னது உன்னை பார்த்து தான்.. இதை நாங்க சொல்லல #பிக்பாஸ் எடிட்டர் தான் சொல்லுறாரு" என இந்த நெட்டிசன் விவரமாக குறிப்பிட்டே கொளுத்திப் போட்டு இருக்கிறார். யூடியூப் விமர்சகரான அபிஷேக் ராஜாவுக்கு சுருக்கென இருக்கட்டும் என்றே ராஜு அந்த வசனத்தை திட்டமிட்டு பேசியிருப்பார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காசு வாங்கிட்டா?

காசு வாங்கிட்டா?

"அபிஷேக் மைண்ட் வாய்ஸ்: என்னது காசு வாங்கிட்டு ரிவியூ பண்ணுறோமா??? ஏண்டா உங்க சண்டைல என்ன இழுத்து விடுறிங்க???" என அபிஷேக் ராஜா நினைப்பார் என படு ஜாலியான கமெண்ட்டுகளை போட்டு பங்கமாக கலாய்த்து வருகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள்.

அதிமேதாவிகளுக்கு

அதிமேதாவிகளுக்கு

"தரமான சம்பவம் இன்னிக்கு இருக்கு போல... காசு வாங்கிட்டு Review பண்ற பல அதிமாதவிகள் கவனத்திற்கு.. படம் பாக்கிறதுக்கு முன்னாடியே காசுக்குடுக்கலனு மொக்கைங்கிறது.. காசு வாங்கினதுக்கு மேல் review குடுக்கிறது.." என காசு வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்யும் விமர்சகர்களையும் சேர்த்து விளாசி வருகின்றனர்.

பத்த வச்சிட்டியே பரட்டை

பத்த வச்சிட்டியே பரட்டை

"உள்ளே இருக்கிறவங்க கொளுத்தி போடுறாங்களோ இல்லையோ எடிட்டர் புரமோ எடிட்டிங்கிலேயே கொளுத்தி போடுறாரே.. பத்த வச்சிட்டியே பரட்டை" என இன்றைய மூன்றாவது பிக் பாஸ் புரமோவை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட மீம்களை போட்டு வைரலாக்கி வருகின்றனர்.

டம்மி பீஸ்

டம்மி பீஸ்

"சீக்கிரமே சேவ் ஆகாமல் கடைசி 3 அல்லது 4ல் வரும் போது சினிமா பையன் மைண்ட் வாய்ஸ்.. டம்மி பீஸ்னு ஒரு வாரத்துலயே கண்டு பிடிச்சிட்டீங்களே எப்படினே" என கேட்பார் என்றும் பங்கம் செய்து வருகின்றனர். இன்னைக்கு இந்த சம்பவத்தை கண்டு ரசிக்கவே அத்தனை பேரும் ஆஜர் ஆகப் போகின்றனர் என்பது கன்ஃபார்ம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X