கருமம்.. கருமம்.. வனிதா விஜயகுமார் படத்தை விட மோசமா இருக்கே.. அக்யூஸ்ட் டீசர் அலப்பறை!

சென்னை: ஜோசப் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதாயகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் அக்யூஸ்ட். இதில் கதாநாயகனாக உதயா, கதாநாயகியாக ஜான்விகா மற்றும் அஜ்மல், யோகி பாபு, பிரபாகர், சுபத்ரா, டானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி பேசுபொருளாகி உள்ளது.

அக்யூஸ்ட் திரைப்படம் ஆகஸ்டு 1ந் தேதி தேதி வெளியாக இருக்கும் நிலையில் திரைப்படத்தின் டிரைலர் மட்டும் பாடல் வெளியீட்டு விழா ஜூலை 18ஆம் தேதி சென்னை பிரசாத் லாப்பில் வெளியிடப்பட்டது. இதில் பேசிய இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாஸ், கன்னடத்தில் ஆறு ஏழு படங்களை டைரக்ட் பண்ணி இருந்தாலும் என்னுடைய பயணம், தமிழிலிருந்து தான் தொடங்கியது. சுந்தர் சி, தனுஷ், அர்ஜுன் ஆகியோருடன் படங்கள் உட்பட 400 படங்களில் டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்து உள்ளேன். கன்னட படத்தில் ஒரு தயாரிப்பாளுடன் சேர்ந்து 5 படங்களை இயக்கியிருக்கிறேன். இங்கு, விஷால் உட்பட சில ஹீரோக்களை சந்தித்து கதை சொன்னேன். எதுவும் செட் ஆகாதால் ஆறு மாதம் அமெரிக்காவில் தங்கி விட்டேன். பிறகு சென்னை வந்தேன், அப்போது, பி.ஆர்.ஓ நிகில் முருகன் சார், உதயா கதை தான், நடிகர் உதயா கதை கேட்டார் என சொல்லி என்னை அனுப்பினார் அப்படித்தான் இந்த அக்யூஸ்ட் திரைப்படம் உருவானது என்றார்.

Udhaya Accused Trailer
Photo Credit:

கருமம் மோசமான படமா: தற்போது அக்யூஸ்ட் திரைப்படத்தின் டிரைலரைப் பார்த்த பலர், கருமம்.. கருமம்.. இதெல்லாம் ஒரு படமா என்று சொல்லும் அளவிற்கு உள்ளது. அதாவது, டிரைலரில் சினிமாவிற்கு போறேன் வரத்து லேட்டாகும் என அம்மா வெளியில் கிளம்பு, ஹீரோ உதயா புகுந்து ஹீரோயினுடன் படுக்கை அறையில் புகுந்து விளையாடுகிறார். அதுமட்டுமில்லாமல் இளசுகளை கிளுகிளுப்பாக்கும் வகையில், பல கசமுசா காட்சிகளை டிரைலரில் இடம் பெற்றுள்ளது. 2 நிமிட டிரைலரே இப்படி என்றால், படம் எப்படி இருக்குமோ தெரியவில்லை. இப்போது எல்லாம் கதை இல்லாவிட்டாலும், படத்தில் படுக்கை அறை காட்சி இருந்தால், இளசுகளை கவர்ந்து விடலாம் என தப்புக்கணக்கு போட்டு இது போன்ற காட்சிகளை வைக்கின்றனர். டிரைலரை பார்க்கும் போது, வனிதா விஜயகுமார் எடுத்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தை விட மோசமா இருக்கிறதே என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: udhaya accused trailer உதயா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X