Rekha Nair - நீங்கள் எல்லாம் ஒரு பெண்ணா?.. விவாத நிகழ்ச்சியால் நெட்டிசன்களிடம் சிக்கிய ரேகா நாயர்
சென்னை: Rekha Nair (ரேகா நாயர்) தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் ரேகா நாயர் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
ரேகா நாயர் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரைக்கு வந்தவர். ஒரு சில படங்களில் நடித்த அவர் இரவின் நிழல் படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். தனதுமனதில் பட்டதை பட்டென்று பேசிவிடும் பழக்கம் உடைய ரேகா நாயர் பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக குரல் கொடுத்தார். மேலும் அவர் இறந்துவிட்டால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் என வெளிப்படையாகவே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

ரேகா நாயர் பேட்டி: இந்தச் சூழலில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "பெண்கள் உடைதான் அனைத்துக்குமே காரணம். நான் இப்போது புடவை அணிந்துவந்திருக்கிறேன். நான் கையை தூக்கினால் எனது இடை தெரியத்தான் செய்யும். அதேபோல் பேருந்தில்போகும்போது சில உடைகளை அணிந்து சென்றால் ஒரு ஆண் தொட்டால் அதை ஒரு பெண் அனுபவிக்கத்தான் வேண்டும்" என்றார்.
இப்படி பேசலாமா?: அவரது இந்தப் பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி எத்தனை காலம்தான் ஆண்களின் அத்துமீறலுக்கு ஒரு பெண்னின் உடையை காரணம் காட்டுவது. அதுவும் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு ரேகா நாயர் இப்படி பேசியிருக்கக்கூடாது. பயில்வான் ரங்கநாதன் தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்காக சண்டைக்கு சென்ற ரேகா நாயர் இப்படி பேசலாமா என பலர் கேள்வி கேட்டனர்.
அடுத்த சர்ச்சை: இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சியில் ரேகா நாயர் கலந்துகொண்டார். அப்போது பெண்கள் சுதந்திரம் குறித்து பேசிய அவர், "தாலியை வைத்துக்கொண்டு ஊர் முழுக்க சுற்றிவிட்டு வருவது திருமணம் கிடையாது. ஊர் முழுக்க சுற்றிவிட்டு தாலி மனதுக்குள் இல்லை அதனால் தூக்கி வீசுகிறேன் என பிறரை சொல்வது சுதந்திரம் கிடையாது. லிவிங் டூ கெதர் பற்றியெல்லாம் நான்கு வருடங்களுக்கு முன்னரே பேசிவிட்டேன்.
எல்லாத்தையும் தூக்கி வீசுறீங்க: சுதந்திரம் கிடைத்துவிட்டது என சொல்லிக்கொண்டு பேப்பர், ஆடை,புருஷன் என எல்லாத்தையும் தூக்கி வீசுறீங்க. நமக்கென்று இருக்கும் அனைத்தையும் நீங்கள் உடைக்கிறீர்கள். சுதந்திரம் கிடைத்துவிட்டது என்கிற மமதையில் பெண் சமூகமும் சரி, ஆண் சமூகமும் சரி உச்சக்கட்ட அசிங்கத்தனம் செய்கிறீர்கள்" என்றார்.
பதிலடி கொடுத்த பெண்: ரேகா நாயரின் இந்தப் பேச்சை கேட்டு விவாத நிகழ்ச்சியில் எதிர் தரப்பில் இருந்த பெண் ஒருவர் கொடுத்த பதிலடியில், "பெண் என்றாலே ரேகா நாயர் உடல் சார்ந்தும், நடத்தை சார்ந்தும்தான் பேசுகிறார். அறிவியல் சார்ந்தோ, உரிமை சார்ந்தோ பேசவில்லை. இவர் யாருக்காக பேசுகிறார் என்றே தெரியவில்லை. ரேகா எங்கேயோ போய்விட்டார்தான். ஆனால் எங்கேயோ போய்விட்டு என்ன பேசிக்கொண்டிருக்கிறார் என்பதுதான் முக்கியம்" என தெரிவித்தார்.

வைத்து செய்யும் நெட்டிசன்கள்: அந்த விவாத நிகழ்ச்சியின் குறிப்பிட்ட இந்த பகுதியின் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவை பகிர்ந்து, "ரேகா நாயர் கடுமையான பிற்போக்கு சிந்தனையில் இருப்பதை அவரது பேச்சு உறுதிப்படுத்துகிறது. அவர் இன்னும் பழைய கலாசார வட்டத்துக்குள்ளேயே சிக்கியிருக்கிறார்.
இவ்வளவு பேசும் ரேகா நாயர் சினிமாவில் எதற்காக நிர்வாணமாக நடித்தார். அது கலைக்காக என அவர் கூறினால் கலைக்காக கலாசாரத்தை அடகு வைத்து; பெண் உடலை பலருக்கும் காண்பிப்பாரா ரேகா" என கேள்வி எழுப்பிவருகின்றனர். அதேபோல் விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் இந்த வீடியோவை பகிர்ந்து ரேகா நாயருக்கு எதிர் தரப்பில் பேசிய பெண்மணிக்கு தனது பாராட்டை தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











