ட்விட்டரில் விவாகரத்து.. ட்விட்டரில் வாழ்த்து.. எல்லாம் காலக்கொடுமை.. கடுப்பான நெட்டிசன்ஸ் !

சென்னை : வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணி பார் என்பார்கள். திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நிகழ்வாகும்.

இதற்காகத்தான் ஜாதகம், ஜோசியம், பொருத்தம் பார்த்து, திருமணம் நடைபெறுகிறது.

ஆனால், இன்றோ காலம் அனைத்தையும் மாற்றி தேனிலவுக்கு சென்ற இடத்தில் கூட பரஸ்பர புரிதல் இல்லாமல் சண்டை போட்டு பிரிந்து செல்லும் விநோதமும் நடக்கிறது.

ஏற்றுக்கொள்ள முடியாது

ஏற்றுக்கொள்ள முடியாது

திருமணமான 3 மாதங்களில் ஆரம்பித்து, 3 ஆண்டுகளுக்குள் திருமண வாழ்க்கை கசந்த தம்பதியரே அதிக அளவில் நீதிமன்றத்தை நாடுகின்றனர். ஆனால், பல ஆண்டுகாலம் வாழ்த்துவிட்டு கருத்துவேறுபாடு காரணமாக பிரிகிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை.

சமந்தா,நாகசைத்தன்யா பிரிந்தனர்

சமந்தா,நாகசைத்தன்யா பிரிந்தனர்

காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா மற்றும் நாகசைத்தன்யா கடந்த ஆண்டு தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரிவதாக அறிவித்துவிட்டு பிரிந்தனர். இவர்கள் ஏன் பிரிந்தார்கள், இவர்களுக்கு இடையே என்ன கருத்துவேறுபாடு என்ற எந்த தகவலும் இல்லை.

ஐஸ்வர்யா, தனுஷ் பிரிந்தனர்

ஐஸ்வர்யா, தனுஷ் பிரிந்தனர்

18 ஆண்டுகள் மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்த ஐஸ்வர்யா, தனுஷ் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரிவதாக அறிவித்துவிட்டு பிரிந்தனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற மகன்கள் இருக்கும் நிலையில் இவர்களின் பிரிவு முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கடந்த 3 மாதங்களாகவே இணையத்தின் ஹாட் டாப்பிங் இவர்கள் நான்.

படு பிஸி

படு பிஸி

பிரிவுக்கு பின் நான் என் வேலையை பார்க்கிறேன், நீ உன்வேலை பாரு என்பது போல தனுஷ் வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் திரைப்படத்தில் படுபிஸியாக நடித்து வருகிறார். அதேபோல ஐஸ்வர்யாவும் பயணி ஆல்பம் பாடலை இயக்கி இருந்தார். இந்த ஆல்பலத்தை ரஜினி நேற்று வெளியிட்டு மகளை பாராட்டி வாழ்த்தும் தெரிவித்து இருந்தார்.

கடுப்பான நெட்டிசன்ஸ்

கடுப்பான நெட்டிசன்ஸ்

இந்த பயணி வீடியோவுக்கு தனுஷ் Congrats my friend ,God bless என்று பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். தனுஷின் வாழ்த்திற்கு ஐஸ்வர்யா, Thank you Dhanush....Godspeed என்று பதிலளித்துள்ளார். ட்விட்டரில் இவர்கள் இருவரும் பதிவிட்டு வருவது சில நெட்டிசன்களை கடுப்பாக்கி உள்ளது.

எல்லாம் காலக்கொடுமை

எல்லாம் காலக்கொடுமை

திருமணமும், விவாகரத்தும் தற்போது இணையத்திலேயே நடந்து வருவதால், பொருமை இழந்த ஒரு நெட்டிசன்ஸ் ட்விட்டரில் விவாகரத்து, ட்விட்டரில் வாழ்த்து. எல்லாம் காலக் கொடுமை. கேட்கிறவன் கேணை எனில் கேழ்வரகில் நெய் ஒழுகுமாம். என பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Maaran Movie Review by Poster Pakiri | Dhanush | Malavika Mohanan | Karthick Naren | Filmibeat Tamil
அப்படினா என்ன?

அப்படினா என்ன?

அதே தனுஷூக்கு நன்றி சொன்ன ஐஸ்வர்யா, Thank you Dhanush....Godspeed என்று பதிலளித்துள்ளார். Thank you சரி அது என்ன God speed அப்படினா என்ன என்று கேட்டு வருகின்றனர்.இன்னும், சிலர், இரண்டு பேரும் கேசுவலா இருக்காங்களாமாம் அதற்காகத்தான் இப்படி பதிவிட்டுக்கொள்கிறார்கள் என்று பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X