பாண்டிச்சேரி என்ன பாகிஸ்தான் பார்டர்லயா இருக்கு.. ஐஸ்வர்யா ராஜேஷை ரவுண்டு கட்டிய நெட்டிசன்ஸ்!
சென்னை: ப்ளூ சட்டை மாறன் சொன்னது போலவே வரிசையாக நடிகர்களும் நடிகைகளும் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து டிராமா போட ஆரம்பித்து விட்டனர். இந்த வாரம் புது படங்கள் ரிலீஸ் ஆகவில்லை என்றால் என்ன தேமுதிக அலுவலகம் பக்கம் போனால் ஏகப்பட்ட படங்களை பார்த்து என்டர்டெயின் ஆகலாம். சினிமாவில் கூட நடிகர்கள் இப்படியெல்லாம் நடிப்பதில்லை, நிஜத்தில் எப்படி நடிக்கின்றனர் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர். லேட்டஸ்ட்டாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வசமாக சிக்கி உள்ளார்.
விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி அதிகாலை 6.10 மணிக்கு மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். நோய் பாதிப்பு காரணமாக கடந்த சில வருடங்களாகவே சிகிச்சையில் இருந்து வந்த விஜயகாந்த் உயிரிழந்த நிலையில், தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக முதலில் வைக்கப்பட்டது. பின்னர் பிரபலங்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்த வசதியாக தீவுத்திடலுக்கு டிசம்பர் 29ம் தேதி மாற்றப்பட்டது.

நள்ளிரவே வந்த விஜய்: ஹைதராபாத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய் விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்ததுமே அங்கிருந்து விமானம் மூலமாக சென்னைக்கு வந்து நள்ளிரவே கூட்ட நெரிசலையும் பாராமல் விஜயகாந்த் உடலை பார்த்து கண் கலங்கினார். கூட்டத்தில் அவர் மீது ஒருவர் செருப்பு வீசியதாகவும் பஞ்சாயத்துகள் கிளம்பின.
ரஜினிகாந்த், கமல் அஞ்சலி: வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அன்று அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசன், இளையராஜா, டி. ராஜேந்தர், கவுண்டமணி என பல பிரபலங்களும் மூத்த நடிகர்களும், கலைஞர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் அஞ்சலி: விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நடிகர்கள் தற்போது வரிசையாக வந்து அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றன்ர். அருண் விஜய், கார்த்தி, சிவகுமார், சூர்யா, சசிகுமாரை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் அஞ்சலி செலுத்தி உள்ளார். விஜயகாந்த் மறைவின் போது பாண்டிச்சேரியில் ஷூட்டிங்கில் இருந்தேன் இப்போ தான் சென்னை வந்தேன். உடனே விஜயகாந்த் சாருக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளேன். அவரது மகன்களை எனக்கு நல்லா தெரியும். நல்ல நண்பர்கள், நிறைய தடவை விஜயகாந்த் சாரை பார்க்க அனுமதி கேட்டேன். ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பேசினார்.
கலாய்க்கும் ரசிகர்கள்: நேற்று தான் நகைக்கடை திறக்க சென்னைக்கு வந்திருந்தீங்க இப்போ இப்போதான் வரேன் சொல்றீங்க உலகமகா நடிப்புடா சாமி என ஐஸ்வர்யா ராஜேஷின் பேச்சை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், பாண்டிச்சேரி என்னம்மா பாகிஸ்தான் பார்டர்லயா இருக்கு அதான் விஜயகாந்த் உடல் 2 நாள் இருந்ததே வரணும்னு நினைத்திருந்தா வந்திருக்கலாம் என்றும் இதெல்லாம் ஆக்டிங் மேடம் என ட்ரோல் செய்து வருகின்றனர். ப்ளூ சட்டை மாறனும் தனது பங்குக்கு சென்னையில் திடீரென கிளிசரின் வியாபாரம் அதிகரித்து விட்டது என்றும் இன்னும் விஷால் வந்து என்ன பண்ணப் போறாரோ என ட்ரோல் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











