யப்பா இது விவேகம் 2ப்பா.. வெறித்தனமாக வெளியான வலிமை க்ளிம்ஸை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ் #Vivegam2

சென்னை: இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள தல அஜித்தின் வலிமை க்ளிம்ஸ் நேற்று வெளியான நிலையில், நெட்டிசன்கள் அந்த க்ளிம்ஸை ட்ரோல் செய்து வருகின்றனர்.

விவேகம் 2 படத்துடன் ஒப்பிட்டு ஏகப்பட்ட மீம்களை உருவாக்கி #Vivegam2 ஹாஷ்டேக்கை வேற லெவலில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும், ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் மற்றும் இரும்பு திரை உள்ளிட்ட படங்களில் இருந்து காட்சிகள் காப்பியடிக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

ஆகாயத்தில் தல

ஆகாயத்தில் தல

வலிமை படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று வலிமை படத்தின் அட்டகாசமான க்ளிம்ஸ் காட்சி வெளியாகி 5.5 மில்லியன் பார்வைகளை வெறும் 15 மணி நேரத்தில் கடந்து கலக்கி வருகிறது. வலிமை படம் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடுவது போல வேற லெவல் ஸ்டன்ட் காட்சிகளுடன் உருவாகி உள்ளது. தல ஆகாயத்திலேயே பைக்கில் பறப்பது போன்ற காட்சிகள் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

அளவற்ற வலிமை

அளவற்ற வலிமை

"வலிமை அளவற்ற வலிமை - இதுவே இப்போதைய தேவை" என க்ளிம்ஸ் காட்சியின் ஆரம்பத்தில் போடப்பட்டு டார்க் வெப் பற்றியும் பைக் ரேஸை பயன்படுத்து எப்படி ஹேக்கிங் மற்றும் கடத்தல் நடைபெறுகிறது என்பது குறித்தும் க்ளிம்ஸில் படத்தின் கதையை தெளிவாக விளக்கி உள்ளனர். வில்லன் கார்த்திகேயாவின் டார்க் வெப்பை எப்படி தல அஜித் துவம்சம் செய்யப் போகிறார் என்பது தான் வலிமை படத்தின் கதை.

கலாய்க்கும் ரசிகர்கள்

கலாய்க்கும் ரசிகர்கள்

சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சண்டை எப்போதும் போல நேற்றும் பெருமளவில் வெடித்தது. பீஸ்ட் ஃபர்ஸ்ட் லுக் வந்ததும் ஷாட் கன்னுக்கு ஏன் வியூ பாயின்ட்டார் என்றும் அந்த துப்பாக்கிக்கு வாயில் வைத்திருக்கும் தோட்டா பொருந்தாது என்றும் அஜித் ரசிகர்கள் ஓட்டினர். அதே போல நேற்று வெளியான வலிமை க்ளிம்ஸை விஜய் ரசிகர்கள் மற்றும் சூர்யா உள்ளிட்ட மற்ற நடிகர்களின் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

விவேகம் 2 டிரெண்டிங்

விவேகம் 2 டிரெண்டிங்

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்த விவேகம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், அந்த படம் போலவே வலிமை படமும் உள்ளதாக விவேகம் படத்தின் பார்ட் 2 தான் வலிமை என்று வேற லெவலில் #Vivegam2 ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

விவேகம் டெலிடட் சீன்

விவேகம் டெலிடட் சீன்

ஹாலிவுட் ஸ்டைலில் ஹை டெக் படமாக உருவான விவேகம் படத்தின் டீசர் மற்றும் டிரைலரை பெருமளவில் நம்பி படத்தை பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. அதே போல தான் வலிமை படமும் இருக்கப் போகிறது என அஜித் ஹேட்டர்ஸ் இந்த வலிமை க்ளிம்ஸை விவேகம் டெலிடட் சீன் என டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Recommended Video

Valimai Update | Yuvan Shankar Raja Interview | U1 Records | Tamil Filmibeat
யப்பா இது விவேகம் 2ப்பா

யப்பா இது விவேகம் 2ப்பா

வலிமை படத்தின் அட்டகாசமான க்ளிம்ஸை பார்த்த நெட்டிசன்கள் "யப்பா இது விவேகம் 2ப்பா" என கில்லி பட வைரல் மீமை போட்டு பங்கமாக கலாய்த்து தள்ளி வருகின்றனர். பதிலடி கொடுக்கும் விதமாக அஜித் ரசிகர்களும் குருவியில் விஜய் பறக்கலையா என கமெண்ட்டுகளை போட்டு ரசிகர்கள் சண்டையை ஜோராக நடத்தி வருகின்றனர்.

இது வலிமை டா அம்பி

இது வலிமை டா அம்பி

"மாமி இது விவேகம் டெலிடட் சீனா? இது க்ளிம்ஸ் ஆஃப் வலிமை டா அம்பி" என வேற லெவலில் ஏகப்பட்ட மீம்களை போட்டு அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர். அடுத்து பீஸ்ட் டீசர் வராமலா போகும் எங்க ட்ரோலை அப்போ பார்ப்பீங்க என அஜித் ரசிகர்களும் அடுத்த ட்விட்டர் சண்டைக்கு காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X