விடாமுயற்சி X லியோ.. த்ரிஷாவை வைத்து கலந்து கட்டி அடித்த நெட்டிசன்கள்.. ஓவரா காலாய்க்கறாங்கப்பா!
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 6ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் விடாமுயற்சி. படம் வரும் மார்ச் 3ஆம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றதால், மூன்றே வாரங்களில் ஓடிடி தளத்திற்கு வருகிறது என கூறப்படுகிறது. படத்தின் வசூல் குறித்து படக்குழுவினர் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அந்த அளவிற்கு படம் வசூல் ரீதியாக சரியான அடி வாங்கியுள்ளது. இந்நிலையில் இணையத்தில் விடாமுயற்சி மற்றும் விஜய்யின் லியோ படக் காட்சிகளை இணைத்து, ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
விடாமுயற்சி படம் லைகா நிறுவனம் தயாரித்து, மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான படம். பிரேக் டவுன் என்ற ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் அஜித் குமாருடன் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்தார்கள். அஜித் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த படம் ரிலீஸ் ஆனதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் படம் பார்க்க வந்தார்கள். ஆனால் படத்தில் அஜித்துக்கு என மாஸான காட்சிகள் என எதுவும் இல்லாததால், படம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. படத்தில் மாஸ் காட்சிகள் வேண்டாம் என அஜித் கூறியிருந்ததாக ஏற்கனவே மகிழ் திருமேனி தெரிவித்திருந்தார்.

அதேபோல் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான படம் லியோ. விஜய், த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வெளியான இந்த படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்கினார். செவன் ஸ்கீரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். லோகேஷ் கனகராஜ் சினிமாடிக் யுனிவர்ஸில் இந்த படமும் முக்கியமான படமாக உள்ளது.

விடாமுயற்சி: இப்படியான நிலையில், இணையவாசிகள் சிலர், விடாமுயற்சி படத்தில் வரும் சில காட்சிகளையும் லியோ படத்தில் வரும் சில காட்சிகளையும் இணைத்து, வீடியோவாக உருவாக்கி பகிர்ந்து உள்ளார்கள். இந்த வீடியோ பார்ப்பதற்கு விஜய், அஜித் மற்றும் த்ரிஷா ஆகியோரைக் கலாய்க்கும் விதமாக இருப்பதால் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

லியோ: அதாவது, விடாமுயற்சி படத்தில் அஜித் மற்றும் த்ரிஷா விவாகரத்து செய்து கொள்ள முடிவு எடுப்பார்கள். அதற்கு காரணம், த்ரிஷா வேறு ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதுதான். இது தொடர்பாக அஜித்திடம் த்ரிஷா பேசி, விவாகரத்து செய்து கொள்ளலாம் எனக் கூறும்போது, அஜித், மறுப்பு எதுவும் சொல்லாமல், விவாகரத்திற்கு ஓ.கே சொல்லிவிடுவார்.

கலாய்: இப்படி இருக்கும்போது, லியோ படத்தில் விஜய் காஃபி ஷாப் நடத்துவார். அஜித் மற்றும் த்ரிஷா விவாகரத்து முடிவு எடுத்த பின்னர் ஒரு காஃபி ஷாப்புக்கு செல்வார்கள். எடிட் செய்த இணையவாசிகள், அஜித் மற்றும் த்ரிஷா விஜய்யின் காஃபி ஷாப்பிற்குதான் வந்துள்ளார்கள்.
த்ரிஷா திருமணத்தை மீறிய உறவில் இருப்பது விஜய்யுடன் தான் என, எடிட் செய்துள்ளார்கள். லியோ படத்தில் விஜய்யின் மனைவியாக த்ரிஷா நடித்திருப்பார். மேலும் விஜய் அஜித் எதிரெதிரே அமர்ந்து முறைத்துப் பார்த்துக் கொள்வது போலவும் எடிட் செய்துள்ளார்கள். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவுகிறது.




Click it and Unblock the Notifications











