இது நயன்தாரா இல்லைப்பா.. குட்டி வாணி போஜன்.. அனிகாவை அநியாயத்துக்கு கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: குட்டி நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வந்த அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் போட்டோக்களை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

கேரளாவை சேர்ந்த அனிகா சுரேந்திரன் குழந்தை பருவத்தில் இருந்து தென்னிந்திய சினிமாக்களில் நடித்து வருகிறார்.

மேலும், இன்ஸ்டாகிராமில் இவருக்கு 1.3 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் இளவரசி

இன்ஸ்டாகிராம் இளவரசி

என்னை அறிந்தால், நானும் ரவுடி தான், விஸ்வாசம் என ஏகப்பட்ட படங்களில் பேபி அனிகாவாக வலம் வந்த இவர், சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் புதுப் புது போட்டோஷூட்களை நடத்தி லைக்குகளை குவித்து வருகிறார். சமீபத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்களை இன்ஸ்டாகிராமில் கடந்ததை கோலாகலமாக கேக் வெட்டி கொண்டாடினார்.

ஹீரோயினாக அறிமுகம்

ஹீரோயினாக அறிமுகம்

பேபி அனிகாவாக நடித்து வந்த அனிகா சுரேந்திரன் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற கப்பேலா எனும் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் படத்தின் மூலமாகத்தான் விரைவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார். அந்த படத்திற்கு புட்டபொம்மா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆபாச நடனம்

ஆபாச நடனம்

குழந்தை நட்சத்திரமாக கலக்கிய அனிகா தற்போது பருவப் பெண்ணாக மாறியுள்ளதால் ஏகப்பட்ட சிக்கல்களையும் சந்தித்து வருகிறார். சமீபத்தில் ஆபாசமாக அனிகா நடனமாடிய வீடியோ என்ற பேரில் ஒரு வீடியோ வைரலானது. பின்னர், அது நானில்லை என்றும், அது மார்ப் செய்யப்பட்டுள்ளது. இது போல எந்தவொரு பெண்ணுக்கும் நடக்கக் கூடாது என்று ஆதங்கப்பட்டு விளக்கம் அளித்திருந்தார்.

நகைக்கடை விளம்பரம்

நகைக்கடை விளம்பரம்

அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் அனிகா சுரேந்திரன், தற்போது சேலை கட்டி நகைகளை அணிந்து கொண்டு கொடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் வழக்கம் போல வைரலாகி வருகின்றன. நகைக் கடை விளம்பரம் ஒன்றுக்காக இந்த போட்டோக்களை அனிகா வெளியிட்டுள்ளார்.

வாணி போஜன் மாதிரி

வாணி போஜன் மாதிரி

அனிகா சுரேந்திரனை ரசிகர்கள் பலரும் குட்டி நயன்தாரா என அழைத்து வந்த நிலையில், இந்த போட்டோக்களை பார்த்த சில நெட்டிசன்கள், நீங்க நயன்தாரா மாதிரி எல்லாம் இல்லை. நடிகை வாணி போஜன் மாதிரி தான் இருக்கீங்க என மிகவும் நக்கலாக ட்ரோல் செய்து கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். நடிகை வாணி போஜனை சின்னத்திரை நயன்தாரா என முன்னதாக ரசிகர்கள் அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

லட்சக்கணக்கில் லைக்ஸ்

லட்சக்கணக்கில் லைக்ஸ்

அனிகா சுரேந்திரன் எப்போது புதிய போட்டோக்களை வெளியிட்டாலும் அவரது ரசிகர்கள் அந்த போட்டோக்களுக்கு லைக் செய்து வைரலாக்குவது வழக்கம். இந்த புகைப்படங்களையும் பார்த்து விட்டு, சேலையில் அழகா ரொம்ப அழகா இருக்கீங்க என்றும், நல்லா வளர்ந்துட்டீங்க என்றும், குட்டிப் பொண்ணு மாதிரியே தெரியல, க்யூட்டா இருக்கீங்க என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X