நாட்டாமை அர்ச்சனா.. நடு வீட்டில் தாக்கப்பட்டார்.. அனல் தெறிக்கும் 3வது புரமோ.. லிஸ்ட் செட் ஆகலயே?

சென்னை: இன்னைக்கு பாலாஜிக்கும் அர்ச்சனாவுக்கும் தான் செம சண்டை போல இருக்கே.. இரண்டாவது மற்றும் மூன்றாவது புரமோவில் அவங்களையே பிக் பாஸ் எடிட்டர் ஹைலைட் பண்ணியிருக்காரு..

Recommended Video

Bigg Boss Day 18 Highlights • அர்ச்சனா Second பிக் பாஸ் போல? | Bigg Boss 4 Tamil

அர்ச்சனா வந்த உடனே தலைவலி என சொன்ன பாலாஜி முருகதாஸ், தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் தனியாளாக அர்ச்சனாவை தைரியமாக எதிர்த்து கேள்வி கேட்டு வருகிறார்.

ரியோ ராஜ், நிஷா, சனம் ஷெட்டிக்கு ஆதரவாகவும் சுரேஷ் தாத்தாவுக்கு எதிராகவும் அர்ச்சனா நடப்பதாக பாலாஜி நெற்றி பொட்டில் அடித்தாற் போல வெளிச்சப்படுத்தி உள்ளார்.

இன்னைக்கும் இவங்க சண்டை தான்

இன்னைக்கும் இவங்க சண்டை தான்

நேற்றைய நிகழ்ச்சியில், சனம் ஷெட்டியை புரபோஸ் பண்ண வைத்து பாலாஜிக்கும் சனம் ஷெட்டிக்கும் இருந்த சண்டைக்கு இடைக்கால தடை விதித்திருக்கும் பிக் பாஸ், இனி அர்ச்சனாவுக்கும் பாலாவுக்கும் இடையே நல்லா மூட்டி விட்டு டி.ஆர்.பியை எகிற விட்டு வருகிறார். புரமோ வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

லிஸ்ட் சரியில்லையே

லிஸ்ட் சரியில்லையே

சுரேஷ் சக்கரவர்த்தி போதும் டா, கேம் ஆட வந்து கேவலப்பட்டது தான் மிச்சம் என முதல் ஆளாக வெளியேறுகிறேன் என 16வது இடத்தையே விட்டுக் கொடுக்காமல் பிடித்துக் கொண்டு கடைசி வரைக்கும் நிற்கிறார். அவரை தொடர்ந்து சனம், சம்யுக்தா, வேல்முருகன், சோமசேகர், அர்ச்சனா உள்ளிட்டோர் நிற்கின்றனர்.

ஷிவானி எங்கடா

ஷிவானி எங்கடா

இந்த எவிக்‌ஷன் ஆர்டர் லிஸ்ட்டை பார்த்த ரசிகர்கள், பிக் பாஸ் வீட்டில் ஒண்ணுமே பண்ணாத ஆஜீத், ஆரி, கேபி, ஷிவானி எல்லாம் எங்கடா என கேள்வி எழுப்பி உள்ளனர். விஜய் டிவியின் செல்லப் பிள்ளைகளான ரியோ ராஜ், நிஷா, ரம்யா பாண்டியன், ஆஜீத், கேபிரியல்லா, ஷிவானியை எல்லாம் ரொம்பவே சேவ் பண்ணி ஃபேக் கேம் ஆடுறீங்க என்றும் கண்டனங்கள் குவிகின்றன.

நடுவீட்டில் தாக்கப்பட்டார்

நடுவீட்டில் தாக்கப்பட்டார்

அர்ச்சனா அக்காவை தனியாகலாம் இல்லை, ஒட்டுமொத்த கூட்டத்தில் நடு வீட்டில் வைத்தே, நீங்க ஒரு தலை பட்சமாகத்தான் இருக்கீங்க, ரியோ ராஜுக்கு ரொம்பவே சப்போர்ட் பண்றீங்க, சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் தன் மீது வெறுப்புணர்வை காட்டுறீங்க என்பதை வெளிப்படையாக போட்டுடைத்து ஸ்கோர் செய்துள்ளார்.

மூஞ்சிக்கு நேரா

மூஞ்சிக்கு நேரா

செம்ம.. செம்ம.. சூப்பர் டா பாலா.. அர்ச்சனா மனசுல நாட்டாமைன்னு நினைப்பு, அதுவும் தீர்ப்பு நியாயமா சொன்னா கூட பரவாயில்ல, ஒரு தலை பட்சமாத்தான் பேசுது, இப்படி ஒரு ஆளாச்சும் மூஞ்சிக்கு நேரா சொன்னாதான் புரியும் என பாலாஜியின் பேச்சை ஏகப்பட்ட ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

லொட லொட வாய் அர்ச்சனா

லொட லொட வாய் அர்ச்சனா

ஒவ்வொரு முறை யார் பேச வந்தாலும், ஒன் மினிட், ஒன் மினிட் என ஓவர் சீன் போடும் அர்ச்சனா அக்காவை, இன்று முதல் நீ ஒன் மினிட் அர்ச்சனா என்று அன்போடு அழைக்கப்படுவாய்.. லொட லொட வாய் அர்ச்சனா என இந்த பிக் பாஸ் ரசிகர் பங்கமாக கலாய்த்துள்ளார்.

அவன் பெரிய யோக்கியன்

அவன் பெரிய யோக்கியன்

அர்ச்சனா அக்கா ஆர்மியும் சும்மா இல்லை. பாலாஜியை பத்தி நல்லா தெரிஞ்சுகிட்டுத் தான் அர்ச்சனா அக்கா உள்ளே போயிருக்காங்க, அவன் அவங்க அப்பா அம்மா பத்தி சொன்ன பொய் எல்லாம் இவங்களுக்கு நல்லாத் தெரியும், அதனால தான் அவனை ஆஃப் பண்றாங்க, அவன் மட்டும் என்ன பெரிய யோக்கியனா என பாலாஜியையும் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X