நிவாஷினியை அலேக்காக தூக்கிக் கொண்டு ஓடிய அசல் கோளாறு… பதறிய பிக் பாஸ் போட்டியாளர்கள்!
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீசனில் பிரபல கானா பாடகர், பாடலாசிரியர் அசல் கோளாறும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் அசல் கோளாறு பெண்களிடம் தொடர்ந்து அத்துமீறி வருவதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அசல் கோளாறின் ஆர்வக் கோளாறு
பிக் பாஸ் சீசன் 6ல் ஜோர்த்தாலே பாடல் மூலம் பிரபலமான அசல் கோளாறும் பங்கேற்றுள்ளார். சந்தோஷ் நாராயணன், யுவன், ஜிவி பிரகாஷ் ஆகியோரின் இசையில் பாடல்கள் எழுதியுள்ள அசல் கோளாறு, பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போது கொஞ்சம் அமைதியாகவே இருந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பிக் பாஸ் வீட்டில் அசல் கோளாறு செய்யும் அட்ராசிட்டிகள் நெட்டிசன்களை கொதிப்படைய வைத்துள்ளது.

நிவாஷினியுடன் ரொமான்ஸ்
பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றதில் இருந்தே பெண் போட்டியாளர்களுக்கு நூல் விடும் வேலையை தொடங்கினார் அசல் கோளாறு. முதல் நாளில் ஆயிஷாவுடன் நட்பாக பழக வேண்டும் என விருப்பம் தெரிவித்தவர், "வாடா போடா என்றெல்லாம்" கூப்பிடக் கூடாது என கண்டிஷன் போட்டு ஆயிஷாவை அழுது புலம்பவிட்டார். அதன்பின்னர் குயின்ஸியை அடிக்கடி சீண்டிக்கொண்டே வந்த அசல். இப்போது நிவாஷினியிடம் தனது வேலையை காட்ட ஆரம்பித்துள்ளார். பார்க்கும் நேரமெல்லாம் அவருடனே ரொமான்ஸ் செய்து வரும் அசல் கோளாறு, கிடைக்கும் கேப்பில் டச்சிங் ஹங்கிங் கேம்லாம் ஆடி பார்ப்பவர்களை பதற வைக்கிறார்.

நீச்சல் குளத்துக்குள்?
சில தினங்களுக்கு முன்னர் நீச்சல் குளம் அருகே நிவாஷினி பக்கத்தில் படுத்துக்கொண்டே அவருடன் கடலை வறுத்து ரசிகர்களை காண்டாக்கினார் அசல். இப்போது அதையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இன்னொரு தரமான சம்பவத்தை செய்து அனைவருக்கும் ஜெர்க் கொடுத்துள்ளார். இரவில் டாஸ்க் முடித்துவிட்டு நிவாஷினியிடம் பேசிக் கொண்டிருந்த அசல் கோளாறு, எதோ ஒரு காரணத்துக்காக "உன்னை நீச்சல் குளத்தில் கொண்டு போட்டுவிடுவேன்" என விளையாட்டாக பேசினார். அதற்கு "அதெல்லாம் முடியாது" என நிவாஷினி பதில் கூற, அடுத்த நொடியே நிவாஷினியை அலேக்காக தூக்கி தோளில் போட்டுக்கொண்டு ஓடிவிட்டார் அசல் கோளாறு. இதனைப் பார்த்த சக போட்டியாளர்கள் பதறிவிட்டனர்.

ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
முன்னதாக ஜனனிக்கு எப்படி கை கொடுக்க வேண்டும், கை கொடுக்கும் போது எப்படியெல்லாம் சிக்னல் கொடுக்க வேண்டும் என வில்லங்கமாக பாடம் எடுத்தார் அசல். இப்படி மாறி மாறி அசல் கோளாறு ஆர்வக் கோளாறாக செய்த அட்ராசிட்டிகளை, நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ரச்சிதா, மகேஷ்வரி, மைனா, குயின்ஸி, ஆயிஷா என பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்கள் யாரையும் விடாமல் துரத்தி துரத்தி சம்பவம் செய்து வரும் அசல் கோளாறுக்கு, ரசிகர்களிடம் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











