சூனியக்காரி மாதிரியே இருக்கியேமா.. புது ஹேர்ஸ்டைலில் போட்டோ போட்ட அதுல்யா.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை அதுல்யா ரவி, புது ஹேர்ஸ்டைலில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புதிய புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். வழக்கம் போல, அதுல்யா ரவியின் அன்பான ரசிகர்கள், அவரது புதிய புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து பாராட்டி வருகின்றனர்.

எந்த படமும் ஓடவில்லை

எந்த படமும் ஓடவில்லை

கோவை பொண்ணான நடிகை அதுல்யா ரவி நடிப்பில் இதுவரை வெளியான காதல் கண் கட்டுதே, கேப்மாரி மற்றும் நாடோடிகள் 2 என எந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சமூக வலைதளங்களில் அதுல்யா ரவிக்கு இருக்கும் ரசிகர்கள் வட்டத்திற்கு ஏற்ற அளவுக்கு, நல்ல திரைக்கதைகளை தேர்வு செய்து நடித்தால், நல்லா இருக்கும் என ரசிகர்களும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

புது ஹேர்ஸ்டைல்

இந்நிலையில், கர்லி ஹேர் வைத்தபடி சேலை கட்டி அழகாக எடுத்துள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் அதுல்யா ரவி. அவரது இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட்டை பார்த்த நெட்டிசன்கள் சிலர், வழக்கம் போல், மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

அனுபமா மாதிரி இருக்கு

பிரேமம் படத்தில் கர்லி ஹேர் வைத்து, ரசிகர்களை வசீகரித்த அனுபமா பரமேஸ்வரன் மாதிரியே இருக்கீங்க என அதுல்யாவின் இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், அனுபமா மாதிரி ட்ரை பண்றியாம்மா.. உனக்கு செட் ஆகலை எனவும் கழுவி ஊற்றுகின்றனர்.

நல்லா இல்லை

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் ஜெய்யுடன் கேப்மாரி படத்தில் செம்ம கிளாமராக நடித்திருந்த அதுல்யா ரவி, சசிகுமாரின் நாடோடிகள் 2 படத்தில் ஹோம்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடிக்கடி சோஷியல் மீடியாவில் போட்டோ போட்டு ஆக்டிவாக இருக்கும் இவரது இந்த புதிய ஹேர்ஸ்டைலை பார்த்த இந்த நெட்டிசன், இந்த ஹேர்ஸ்டைல் நல்லா இல்லை என கலாய்த்துள்ளார்.

நல்லா இல்லையா

அதுல்யா ரவியின் பரம விசிறியாக இருப்பார் போல இந்த ஐடிக்காரர். இந்த போட்டோவை பார்த்தா நல்லா இல்லை என்று சொன்ன என சண்டைக்கே வந்துவிட்டார். நல்லா இல்லையா, என்னடா ரசனை உனக்கு, சீக்கிரம் ஸ்கூல் படிச்சு முடி, அப்புறம் பாரு, நல்லா இருக்கும் என தனது அனுபவத்தையும் ஷேர் செய்துள்ளார்.

யாராவது சான்ஸ் கொடுங்கப்பா

டெய்லி டிசைன் டிசைனா போட்டோ போடுறா.. யாராவது சான்ஸ் கொடுங்கப்பா என நடிகை அதுல்யா ரவியை பங்கமாக இந்த நெட்டிசன் கலாய்த்தது மட்டுமின்றி கடுப்பேற்றியும் உள்ளார். சீக்கிரமே ஒரு நல்ல படத்துல நடிச்சி இவங்க வாயை அதுல்யா ரவி நிச்சயம் அடைப்பாங்க என அதுல்யா ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர்.

சூனியக்காரி மாதிரியே

எல்லாத்துக்கும் மேல, இந்த குசும்புக்கார நெட்டிசன் போட்ட கமெண்ட் தான் ஹைலைட்டே, சேலை கட்டி அழகா செம்ம செக்ஸியா இருக்கும் தனது புகைப்படத்தை அதுல்யா ரவி பதிவிட்டுள்ள நிலையில், அதனை பார்த்து, Tangled படத்துல வர சூனியக்காரி மாதிரியே இருக்கியேம்மா.. பயமா இருக்குதுன்னு எமோஜி போட்டு ஓட்டியுள்ளார்.

Recommended Video

அதுல்யாவை கலாய்த்த தம்பி ராமையா | Thambi Ramaiah | Adutha Sattai Audio Launch

கார்ட்டூன் பொம்மை

டிஸ்னி தயாரிப்பில் வெளியான அனிமேஷன் திரைப்படமான பிரேவ் படத்தில் வரும் இளவரசி மெரிடா மாதிரியே இருக்கீங்க, இதுபோன்ற இளவரசி கதாபாத்திரத்தில் நீங்க நடிச்சீங்கன்னா உங்களுக்கு செம்மையா ஷூட் ஆகும் என லிட்டர் கணக்கில் இந்த ரசிகர் ஜொள்ளு வடித்துள்ளார். மேலும், அதுல்யாவின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூப்பர், அழகு தேவதை என புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X