ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாக போஸ்டரும் காப்பியா? இயக்குநர் அட்லி பெயரில் போடப்பட்ட ட்வீட்.. என்ன பாஸ்?

சென்னை: இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டர் காப்பி என சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

Recommended Video

சென்னை: ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகமும்... தனுஷூம்.. செல்வராகவனின் ஸ்பெஷல் அறிவிப்பு..!

ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் அறிவிப்பு போஸ்டரை பார்த்ததும் ரசிகர்கள் ஆச்சர்யத்தில் வியந்தனர்.

ஆனால், அதுவும் காப்பி என ஆதாரத்துடன் இயக்குநர் அட்லி பெயரில் ஃபேக் ஐடி போஸ்ட் போட்டது பரபரப்பை கிளப்பி உள்ளது.

கனவுப் படம்

கனவுப் படம்

இயக்குநர் செல்வராகவனின் கனவுப் படமான ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் வரும் 2024ம் ஆண்டு வெளியாகும் என்கிற அறிவிப்பை நேற்று இயக்குநர் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். மீண்டும் சோழனின் பயணத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் 2024ம் ஆண்டை இப்போதே எதிர்நோக்க தயாராகி விட்டனர்.

புதுப்பேட்டை 2

புதுப்பேட்டை 2

கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ள நடிகர் தனுஷ், தொடர்ந்து தனது அண்ணன் செல்வராகவனுடன் இரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் புதுப்பேட்டை 2 படமும், ஜிவி பிரகாஷ் குமார் இசையில் ஆயிரத்தில் ஒருவன் 2 படமும் அடுத்தடுத்து உருவாக உள்ளது தனுஷ் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுவும் காப்பியா

இதுவும் காப்பியா

இந்நிலையில், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள், இது எந்த ஆங்கில படத்தின் போஸ்டர் என இணையத்தில் தேட ஆரம்பித்தனர். ஆனால், கடைசியில் மேத்யூ லாஃப்ரே எனும் ஆர்ட் புத்தகத்தின் அட்டைப் பட போஸ்டர் பட்டி டிங்கரிங் செய்யப்பட்டு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

அட்லி பெயரில் ட்வீட்

அட்லி பெயரில் ட்வீட்

மேலும், இயக்குநர் அட்லி பெயரை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஃபேக் ஐடியில் அந்த ட்வீட் போடப்பட்டு, "இதையே நான் பண்ணியிருந்தா, எல்லாரும் என்னை பொளந்துருப்பீங்களே டா" என்றும் கேப்ஷன் போட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளனர். ரசிகர்கள் பலர் அது ரியல் அட்லி ஐடி என்று நினைத்தது தான் இதில் வேடிக்கை.

படமே காப்பி தான்

படமே காப்பி தான்

ஆயிரத்தில் ஒருவன் படமே ஹாலிவுட்டில் வெளியான மம்மி உள்ளிட்ட படங்களின் காப்பி தான் என்றும், செல்வராகவன் அந்த காலத்து அட்லி என்றும் பங்கமாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஒரு பிரம்மாண்ட படத்தின் அறிவிப்பு போஸ்டரை ஒரு போட்டோஷூட் கூட நடத்தாமல் எப்படி காப்பி டிசைன் பண்ணி அனுப்புகின்றனர் என்றும் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X