நீங்க அதுக்கு சரி பட்டு வரமாட்டீங்க.. பிரபல பாலிவுட் நடிகரை பங்கமாக வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

மும்பை: ஹாலிவுட் பட வில்லன் 'ஜோக்கர்' போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை சொன்ன பாலிவுட் நடிகரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

சின்னத்திரை நடிகராக இருந்து விக்கி டோனர் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா.

அந்தாதூன், பாலா படங்களில் இவரது அட்டகாசமான நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சிக்கலான கதாபாத்திரங்கள்

சிக்கலான கதாபாத்திரங்கள்

பாலிவுட்டில் சர்ச்சையை கிளப்பும் மற்றும் சிக்கலான கதாபாத்திரங்களில் செம போல்டாக நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறார் நடிகர் ஆயுஷ்மான் குரானா. விந்து தானம் செய்யும் இளைஞராக விக்கி டோனரில் நடித்த அவர், ஓரினச் சேர்க்கை, வழுக்கை தலை நாயகன் உள்ளிட்ட பல வித்தியாசமான கதைகளில் நடித்துள்ளார்.

ஆன்லைன் ரிலீஸ்

ஆன்லைன் ரிலீஸ்

அமிதாப் பச்சன் உடன் ஆயுஷ்மான் குரானா இணைந்து நடித்துள்ள குலாபோ சிட்டபோ திரைப்படம் பாலிவுட்டில் முதல் படமாக நேரடியாக OTT பிளாட்ஃபார்மில் வெளியாகிறது. சுஜித் சர்கார் இயக்கத்தில் உருவாகி உள்ள அந்த படம் அமேசான் பிரைமில் வரும் ஜூன் 12ம் தேதி ரிலீசாகிறது.

மணிஹெய்ஸ்ட் ஹீரோ

மணிஹெய்ஸ்ட் ஹீரோ

நெட்பிளிக்ஸில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ஸ்பெயின் வெப்சீரிஸான மணிஹெய்ஸ்ட் தொடரை பாலிவுட்டில் ரீமேக் செய்தால், ஆயுஷ்மான் குரானா, புரொஃபஸர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவார் என மணிஹெய்ஸ்ட் இயக்குநர் உள்பட பலரும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த நெகட்டிவ் ரோலில் நடிக்க ஆயுஷ்மான் குரானா தனது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஜோக்கராக நடிக்க ஆசை

ஜோக்கராக நடிக்க ஆசை

பேட்மேன் படத்தில் வில்லனாக வரும் ‘ஜோக்கர்' கதாபாத்திரம் சோலோ படமாக கடந்த ஆண்டு வெளியாகி சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளை தட்டிச் சென்றது. தற்போது ஃபேன் மேட் போஸ்டர் ஒன்றை வெளியிட்ட நடிகர் ஆயுஷ்மான் குரானா, ஜோக்கராக நடிக்க வேண்டும் என்ற ஆசையை தற்போது இந்த ரசிகர் பூர்த்தி செய்து விட்டார் என பாராட்டி அந்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

அமுல் பேபி

ஆயுஷ்மான் குரானாவின் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவதை கண்டித்து ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்து வந்த நிலையில், தற்போது, ஜோக்கராக நடிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்திய அவரை பலரும், நீங்கள் அந்த கதாபாத்திரத்திற்கு செட் ஆக மாட்டீர்கள், அமுல் பேபி போல ரொம்ப குட் பாயாக இருக்கீங்க என கமெண்ட் செய்து கிண்டல் செய்து வருகின்றனர்.

அதுக்கு நீங்க சரிபட்டு வர மாட்டீங்க

மணிஹெய்ஸ்ட் வெப்சீரிஸில் வரும் புரொபஸர் கதாபாத்திரத்திற்கு கூட நீங்க பக்காவா இருப்பீங்க, உண்மைய ஓப்பனா சொல்லணும்னா, ஜோக்கர் கதாபாத்திரத்திற்கு நீங்க கொஞ்சமும் சரிபட்டு வர மாட்டீங்க என பாலிவுட் ரசிகை ஒருவர் ஆயுஷ்மான் குரானாவை பங்கமாக கலாய்த்துள்ளார். அவரது கருத்தையே பலரும் ஆமோதித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X