அடாவடிக்கு எண்டு கார்டு போட.. யாராவது நிச்சயம் ஒருநாள் வருவாங்கடா.. பாலாவுக்கு டோட்டல் டேமேஜ்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியின் 34வது நாள் எபிசோடின் மூன்றாவது புரமோவை பார்த்த ரசிகர்கள் பாலாவை வச்சு செய்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பாலாவை வறுத்து எடுப்பது போதாது என நெட்டிசன்கள் கமெண்ட் பக்கத்தில் கழுவி கழுவி ஊத்தி வருகின்றனர்.
சம்யுக்தாவும் சேர்ந்து பாலாஜியின் நரித் தனத்தை கண்டு கொண்டார் என்றார் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

இன்பமாய் இருக்குதய்யா
தலைவர் பதவி குறித்தும், பாலாஜி முருகதாஸ் சம்யுக்தாவை வைத்து செய்த அரசியல் குறித்தும் கமல் கேட்டதும், சம்யுக்தா, ஆமாம் சார் எல்லாம் உண்மை தான் சார் என சொன்னதை கேட்டதும், பாலா முகம் மாறியதை பார்த்ததும், சம்யுக்தா சரியான ஆப்பு வச்சிட்டீங்க இன்பமாய் இருக்குதய்யா என ஸ்பைடர் பட எஸ்.ஜே. சூர்யா போல ரசிகர்கள் ஆகி விட்டனர்.

அன்போடு அழைக்கப்படுவாய்
சம்யுக்தா பெயரையே சொம்புயுக்தா என மாற்றிய இந்த நெட்டிசன், "சொம்புயுத்தா இனி நீ பயில்வானின் கைப்பாவை என அன்போடு அழைக்கப்படுவாய்!" என கேவலமாக கலாய்த்துள்ளார். அநேகமாக ஆரி இன்று மன்னிப்பு கேட்கும் அவசியம் இருக்காது என்றும் கூறுகின்றனர்.

தாத்தாவ அனுப்பாதீங்க
பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று சுரேஷ் சக்கரவர்த்தி தான் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சுரேஷ் தாத்தாவை ரொம்பவே மிஸ் பண்ணுவோம் என்றும், தாத்தாவை அனுப்பாதீங்க, மிக்சர் தின்னிகளான ரமேஷ், ஆஜீத், ஷிவானி, கேபியை அனுப்புங்க என்றும் தாத்தா ஆர்மியினர் கூறி வருகின்றனர். இவ்ளோ சப்போர்ட் இருந்தும் அவர் எப்படி வெளியே போகிறார்?
Recommended Video

அடாவடிக்கு எண்ட் கார்டு
"அடாவடிக்கு எண்டு கார்டு போட.. யாராவது நிச்சயம் ஒருநாள் வருவாங்கடா.. இதோ ஆண்டவரு வந்துட்டாரு பார்த்தியா என்றும், இப்போ அடி என சாணி அடிக்கும் சீனை போட்டு, பாலா முகத்தில் சாணி அடிப்பதுமாக பிக் பாஸ் ரசிகர்கள் இந்த கடைசி புரமோவை பார்த்து பாலாவை நல்லாவே வச்சு செய்கின்றனர். இனிமேலாவது பிக் பாஸ் வீட்டில் பாலா ஆரியிடம் பாடம் கற்றுக் கொண்டு மாறுகிறாரா? இல்லை வெளியேறுகிறாரா? என்பதை பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











