எதுக்கு அழுகுறான் பாலாஜி? ரேகா மேம் போனதுக்கா.. இல்லை சனம் ஷெட்டி போகலைன்னா.. இது மரண பங்கம்!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து முதலாவதாக நடிகை ரேகா வெளியேறியதும், எல்லா போட்டியாளர்களும் கதறி கதறி வழக்கம் போல அழுது சீன் போட்டார்கள்.

அதிலும், நம்ம பாலாஜி முருகதாஸ் அழுததை பார்த்த நெட்டிசன்கள், அதை வச்சு சிறப்பான மீமே போட்டு வைரலாக்கி உள்ளனர்.

ரேகாவுக்கு பதிலாக சனம் ஷெட்டி போயிருந்தால் பாலாஜி ஜாலியா சிரிச்சிருப்பாருன்னு சொல்லி கிண்டல் செய்து வருகின்றனர்.

ஷிவானிக்கு காயின்

ஷிவானிக்கு காயின்

கிட்டத்தட்ட பிக் பாஸ் வீட்டில் 14 நாட்கள் நடிகை ரேகா அனைவரிடமும் நன்றாகவே பழகி ஒரு புதிய குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார். அதிலும், தனது மகளை போலவே நினைத்த ஷிவானி நாராயணுக்குத் தான் உண்டியலில் இருந்து உடைத்த காயினை நடிகை ரேகா கொடுத்தார்.

உண்மையா அழுத ஷிவானி

உண்மையா அழுத ஷிவானி

சின்னத்திரை நடிகை ஷிவானிக்கு அந்த வீட்டில் இதுவரை ஆதரவாக இருந்ததும் ரேகா தான். மற்ற எல்லோருமே ஷிவானியை ஒரு போட்டியாளராகவே பார்த்து, அவரது ஆர்மியினர் கண்டு அஞ்சி நடுங்கி சரியாக பேசாமல், அவர் மிங்கிள் ஆகவில்லை என புகார் அளித்தனர். இந்நிலையில், ரேகா வெளியேறும் போது, உண்மையாவே அழுதது ஷிவானி தான்.

பாலாஜியும் அழுதார்

பாலாஜியும் அழுதார்

பிக் பாஸ் வீட்டில் யார் வந்தா எனக்கென்ன, யார் போனா எனக்கென்ன என இருந்து வரும் பாலாஜி முருகதாஸ். நடிகை ரேகா முதல் ஆளாக இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். என்னடா பாலாஜி தனியா இப்படி உட்கார்ந்து அழுகிறாரே என பிக் பாஸ் ரசிகர்கள் ஃபீல் பண்ணுவதற்குள் அவரை கலாய்த்த வெளியான மீம் செம வைரலாகி வருகிறது.

எதுக்கு அழுகுறான் பாலாஜி?

எதுக்கு அழுகுறான் பாலாஜி?

இவன் நடிகை ரேகா மேடம் போனதுக்கு அழுகுறானா? இல்லை சனம் ஷெட்டி போகலைன்னு அழுகுறானா என சாமி படத்தில் வரும் விவேக் காமெடி சீனை போட்டு பாலாஜி முருகதாஸை பங்கமாக கலாய்த்துள்ள மீம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சனம் ஷெட்டிக்கும் பாலாஜிக்கும் சண்டை

சனம் ஷெட்டிக்கும் பாலாஜிக்கும் சண்டை

டுபாக்கூர் என சனம் ஷெட்டி பணியாற்றிய நிறுவனத்தை பற்றி பிக் பாஸ் வீட்டில் பாலாஜி முருகதாஸ் பேசியதில் இருந்தே, அவருக்கும் சனம் ஷெட்டிக்கும் ஆவது கிடையாது. ஆரம்பத்தில், பாலாஜியை பாராட்டி வந்த சனம் ஷெட்டி, அதன் பிறகு பாலாஜி உடன் சண்டக் கோழியாக சீறி வருகிறார்.

சந்தோஷப்பட்டு இருப்பார்

சந்தோஷப்பட்டு இருப்பார்

ஒருவேளை இந்த வாரம் நடிகை ரேகா போகாமல் சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தால், முதல் ஆளாக பாலாஜி முருகதாஸ் ஹான் சந்தோஷப்பட்டு இருப்பார் என்றும், இப்படி கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்க மாட்டார் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் ஓவராக ஓட்டி வருகின்றனர். நிஜமாவே சனம் போகும் போது பாலாஜி என்ன பண்றாருன்னு கொஞ்சம் வெயிட் பண்ணி பார்ப்போம்.

சிம்ப்ளி வேஸ்ட்

சிம்ப்ளி வேஸ்ட்

தன்னுடைய பெற்றோர்கள் குடிகாரர்கள், தன்னை பற்றிய கவலை இல்லாமல் வாழ்ந்தார்கள், தன்னை சரியாக வளர்க்கவில்லை என்கிற கதையை சொல்லி பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் சட்டென இடம் பிடித்தார் பாலாஜி. ஆனால், அதன் பிறகு வெளியான பாலாஜியின் ஏகப்பட்ட ஜல்சா வீடியோக்கள் அவருக்கு சிம்ப்ளி வேஸ்ட் என்கிற பட்டத்தை கொடுத்தது மட்டுமின்றி கெட்டப் பெயரையும் உருவாக்கி விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X