Bigg Boss 7 Jovika - இதுக்குதான் படிங்கடானு சொல்றது.. ஜோவிகாவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) பிக்பாஸ் 7ல் கலந்துகொண்டிருக்கும் ஜோவிகாவை நெட்டிசன்கள் பங்கமாய் கலாய்த்துவருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த ஒன்றாம் தேதியிலிருந்து தொடங்கி நடந்துவருகிறது. இதற்கு முன்னர் நடந்த ஆறு சீசன்கள் போலவே இந்த சீசனும் களைகட்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகத்தான் இந்த சீசனும் நடந்துகொண்டிருக்கிறது. கலந்துகொண்ட 18 போட்டியாளர்களில் பெரும்பாலானோர் பிரபலமானவர்கள் இல்லை என்றாலும் கண்டெண்ட் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.

பிரதீப்: அந்தவகையில் முதல் கண்டெண்ட்டாக இருப்பவர் பிரதீப் ஆண்டனி. வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளிலிருந்து முழுக்க முழுக்க அவரது மைண்டுக்குள் இந்த கேமில் வெல்ல வேண்டும் என்றுதான் இருக்கிறது. இதன் காரணமாக சகட்டுமேனிக்கு அனைவரையும் போட்டு தாக்குகிறார். அதனால் ஹவுஸ் மேட்ஸுடன் அவருக்கு உரசல்கள் அதிகம் உருவாகியுள்ளன. சமீபத்தில்கூட நிக்ஸன் பிரதீப்பை ஒருமையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பவா செல்லதுரை: இந்த சீசனின் போட்டியாளர்களில் பலரையும் ஆச்சரியப்படுத்திய போட்டியாளர் என்றால் அவர் எழுத்தாளரும், கதை சொல்லியுமான பவா செல்லதுரைதான். இலக்கிய உலகில் ரொம்பவே பரிச்சயமான பவா இந்த வீட்டுக்குள் தாக்குப்பிடிப்பாரா என்ற கேள்வியே அதிகம் எழுந்தது. இருந்தாலும் அவர் உள்ளே சென்றது சரிதான் என ஒருசிலர் கூறினர். ஆனால் இந்த வீட்டுக்குள் தன்னால் இருக்க முடியாது என்று கூறி தாமாகவே வெளியேறினார். இதற்கிடையே அனன்யா முதல் வாரத்திலேயே எவிக்ஷன் செய்யப்பட்டார்.
ஜோவிகா: இந்த சீசனின் கண்டெண்ட் குடோனாக ஜோவிகா இருப்பார் என்று ரசிகர்கள் கணித்திருக்கின்றனர். முக்கியமாக பள்ளி படிப்பு அவசியம் என்று கூறிய விசித்திராவுக்கு எதிராக ஜோவிகா போர்க்கொடி தூக்கினார். எனக்கு படிப்பு வரவில்லை விட்டுவிடுங்கள் என்று கூறினார். கமல் ஹாசனும்கூட ஜோவிகாவுக்கு சப்போர்ட் செய்யும்படியே பேசினார். அதேபோல் பிரதீப்பை வாடா போடா என்று சொல்லி அதிர்ச்சி கிளப்பினார். குறிப்பாக ஜோவிகாவின் பள்ளி கல்வி குறித்த நிலைப்பாடு ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இதுக்குதான் படிங்கடானு சொல்றது: இந்நிலையில் பிக்பாஸ் 7ல் ஜோவிகா 400*4 எவ்வளவு என்று கேட்கிறார். அதற்கு விஜய் வர்மாவோ 800 என்று சொல்கிறார். அதை கரெக்ட் என்று ஜோவிகா சொல்கிறார். அதேபோல் நான்கு கால் கிலோ பாக்கெட்டுக்கள் ஒன்றரை கிலோ என்றும் சொல்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் தீரன் படத்தில் வரும் இதுக்குதான் படிங்கடா படிங்கடானு சொல்றது என்ற சீனை வைத்து மீம்ஸ்களை பறக்கவிட்டுக்கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











