இவ்ளோ நாள் கோமாவுல இருந்தியா.. திடீர்னு தமிழில் பேச சொல்ற.. பிக் பாஸை வச்சு செய்யும் ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவை பார்த்தால் பூனை கூட சிரிக்கும் என்பதில் தொடங்கி, முப்பது நாளா என்ன கோமாவுல இருந்த பிக் பாஸ் என பிக் பாஸையே பங்கம் பண்ணும் அளவுக்கு பிக் பாஸ் ரசிகர்களின் இன்றைய எதிர்வினைகள் களை கட்டியுள்ளது.
சம்யுக்தாவை கூப்பிட்டு பிக் பாஸ் இந்த வீட்டில் எல்லோரும் தமிழில் தான் பேச வேண்டும் என கட்டளையிடுகிறார் பிக் பாஸ்.
கடந்த மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், இப்போதுதான் உங்களுக்கு இது ஞாபகம் வந்ததா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி, கிண்டல் செய்து வருகின்றனர்.

தமிழுக்கு வந்த சோதனை
பிக் பாஸ் நிகழ்ச்சியின் தலைப்பு முதல் எல்லாவற்றிலும் ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், போட்டியாளர்களை மட்டும் தமிழிலேயே பேச வேண்டும் என்று கூறுவதே, முட்டாள்த்தனமாக இருக்கிறது என்றும், மேலும், தமிழ் தெரியாத பீட்டர்களை இறக்கி விட்டு, தமிழில் பேச சொல்லி கட்டாயப்படுத்துவதும் சரி இல்லை என மூன்றாவது புரமோவை பார்த்த ரசிகர்கள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர்.

வேல்முருகனை அனுப்பி விட்டு
நல்லா தமிழ் பேசும் வேல்முருகனை சீக்கிரமே அனுப்பி விட்டு, இப்போ இப்படி ஒரு கட்டளை போடுவது சரி இல்லை என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். வேல்முருகன் இந்நேரம், நான் மட்டும் இருந்திருந்தா, புகுந்து விளையாடி இருப்பேன் எனக் கூறுவது போல மீம் போட்டும் கலாய்த்து வருகின்றனர்.

இங்கிலீஷ் மேதாவிகள்
"இங்கிலீஷ் மேதாவிகளை உள்ளே விட்டு ஏன்யா எங்களை இப்படி ரவுசு பண்ற பெரியபாசு!.." என இந்த தீவிர பிக் பாஸ் ரசிகர் வழக்கம் போல தனது நக்கலான கமெண்ட்டை வரிசையாக போட்டு மூன்றாவது புரமோவை வெளுத்துள்ளார். மேலும், சம்யுக்தா, பாலாஜி, ஆஜீத் உள்ளிட்ட கிறுக்கு கும்பலை சுற்றித் தான் கேமரா சுத்துமா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ் தெரியுமா?
"தமிழ்ல எத்தனை உயிர் எழுத்து, மெய்யெழுத்து இருக்குனு தெரியுமா?
That and all we don't know..
தமிழ்ல எழுதிருக்கிறதையாவது படிச்சி புரிஞ்சிக்க முடியுமா?
Ya some what..
தமிழ்ல பேசவாச்சும் தெரியுமா முழுசா?
அது கொஞ்சம் கொஞ்சம் வரும்.
அப்புறம் என்ன இதுக்குடா இங்க இருக்கீங்க..."ன்னு போட்டு இந்த ரசிகர் தரமான சம்பவம் பண்ணி உள்ளார்.

தவமிருக்கிறது நேர்மை
"ஒரு பக்கம் குள்ள நரிகள் கூத்தடிக்கிறது!.. மறுபக்கம் தவமிருக்கிறது நேர்மை" என ஆரியின் ஆர்மியினர் சம்யுக்தா அண்ட் கோவுக்கு எதிராக பொங்கி வருகின்றனர். பிக் பாஸ் எடிட்டரும், தொடர்ந்து புரமோக்களில் கூட சம்யுக்தா,பாலாஜி, ஷிவானியையே ஹைலைட் பண்ணி வருகிறார் என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்து வருகின்றன.

கேபி கை தூக்கல
பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டியை தறுதலைன்னு சொன்னது காமெடின்னு அர்ச்சனா அக்கா, சம்யுக்தா, நிஷா, ஜித்தன் ரமேஷ், ஆஜீத் எல்லாம் கை தூக்கும் போது, கேபி மட்டுமே கை தூக்காமல் இருந்தார் என்றும் ஸ்க்ரீன் ஷாட் போட்டு காட்டி உள்ளனர். அதே தறுதலை வார்த்தையை ஆரி சொன்னப்போ சம்யுக்தாவுக்கு வந்த கோபத்தையும் கிழித்துத் தொங்க விட்டு வருகின்றனர்.

ஏன் டா
ஒரு மாசமா கோமாவில் இருந்தியா பிக் பாஸ் என்றும், எதுக்கு இப்போ தமிழை வச்சு விளையாடுற விஜய் டிவி என்றும் பரிதாபங்கள் கோபி, சுதாகர் போட்டோ போட்டு கழுவி ஊற்றி வருகின்றனர். இன்னும் என்னவெல்லாம் கொடுமையை பார்க்க வேண்டுமோ? எனக் கூறிக் கொண்டே ஒரு புரமோவையும் விடாமல் பார்த்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











