காட்டுக்கு போக போறியா.. இத்தனை நாள் குடும்பத்தை பிரிந்து இருந்தது போதாதா.. வசமாக சிக்கிய ரியோ!
சென்னை: வெளியே போனதும் என்ன பண்ண போறீங்க என கமல் கேட்டதும், ஹவுஸ்மேட்கள் அளித்த பதிலுக்கு நெட்டிசன்கள் செம ஜாலியாக ரியாக்ஷன்களை கொடுத்து வருகின்றனர்.
ஷிவானிக்கு வீட்டுக்குப் போனதும், அவங்க அம்மா பயங்கரமாக கவனிக்கப் போறாங்க, அதை நினைச்சு தான் எந்த பிளானையும் அவர் சொல்லவில்லை என கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

ரியோவின் பிளானை தான் ஒட்டுமொத்தமாக பலரும் வச்சி விளாசி வருகின்றனர்.

டைட்டில் வின்னர்
விருப்பு வெறுப்பு இல்லாமல் பயணித்த ஆரியே டைட்டில் வின்னர் என இந்த தீவிர பிக் பாஸ் ரசிகர் கமெண்ட் செய்துள்ளார். தினமும் ஆரிக்காக ஏகப்பட்ட ட்வீட்களையும் கமெண்ட்டுகளையும் போட்டு தெறிக்கவிட்டு வருகிறார். ஏகப்பட்ட ரசிகர்களும் ஆரிக்கு ஏகப்பட்ட மாஷ் அப் வீடியோக்களையும் எடிட் செய்து வெளியிட்டு வருகின்றனர்.

கன் மாதிரி
சும்மா கன் மாதிரி இருந்த மனிதன்.. தப்பு பண்ணிட்டோம்னு தெரிந்த அடுத்த நொடியே கண்ணுல தண்ணி விட்டாரு பாரு.. அவரோட நல்ல மனசுக்கு பாராட்டு என ஆரியின் ரசிகர்கள் அந்த சீனை மீமாக்கி வருகின்றனர். இதுவரை பாலாவுடன் சண்டையிட்டு வந்த ஆரி ஆர்மியினரும் பாலாவை பாராட்டி வருவது ஆரோக்கியமான ஒன்று.

நேர்மை ஜெயித்தது
அன்பு பிக் பாஸ் வீட்டில் ஜெயித்ததோ இல்லையோ.. நேர்மை பிக் பாஸ் வீட்டில் ஜெயித்து விட்டது.. வாழ்த்துக்கள் ஆரி ஆர்மி என இந்த ரசிகர் ஆரியின் ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர். இறுதிச்சுற்றுக்கும் மக்களின் ஓட்டுக்கள் ஆரிக்கே அதிகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

காட்டுக்கு போக போறியா
உள்ள வந்த 16 பேருல இந்த BB என்னும் Jail ல extreme depressed ஆனது தம்பி ரியோ மட்டும் தான். அதான் காட்டுக்கு போறாரு! வாரா வாரம் வாங்கிக்கட்டுன ஆரி, பாலாஜிலாம் கேஷுவலா இருக்கப்ப.. ரியோவுக்கு இந்த ஓவர் ரியாக்ஷன் ஏன்? இந்த வாரம் பெட்டிய எடுங்க அவ்ளோ கடுப்பா இருந்தா! என ரியோவை வச்சு விளாசி வருகின்றனர்.

ஸ்ட்ராங் ஷிவானி
இந்த வாரம் ஷிவானி வெளியே போகும் நிலையில் அவரை சிங்கப்பெண்ணாக சித்தரித்து விட்டனர் இது பக்கா பிராடு ஷோ என்று சில நெட்டிசன்களும், ஷிவானி எல்லாரும் சொல்வது போல மிக்சர் தின்னி அல்ல, அவங்க நிஜமாவே ஸ்ட்ராங் தான் என்றும அவரது ரசிகர்களும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

கடுப்பான கேபி ரசிகர்கள்
கேபி இதுவரை தனது முயற்சியால் வந்துள்ளார். அவரை பாராட்டத் தான் மாட்டீங்க, அட்லீஸ்ட் புரமோவிலாவது அவர் பேச்சை போட்டு இருக்கலாமே, ஏன் இப்படி பாரபட்சம் காட்றீங்க என கேபி ரசிகர்கள் நிஜமாவே கடுப்பாகி உள்ளனர். ரம்யா அழும் போது அருகே சென்று, அழாத ரம்யான்னு கேபி ஆறுதல் பண்ணதை அவரது ரசிகர்கள் பாராட்டியது சிறப்பு.

லாக்டவுன் போடபோறாங்க
பாலாஜி முருகதாஸ் தான் இந்த சீசனின் என்டர்டெயினர் என்றும் அவரது கோவா ட்ரிப் நல்லபடியா இருக்கவும் வாழ்த்திய இந்த ரசிகர், பார்த்து நீங்க வெளியே வரப்போ இன்னொரு லாக்டவுன் போட்ற போறாங்க என செம ட்விஸ்ட்டும் கொடுத்து கலாய்த்து வருகிறார். இன்னொரு லாக்டவுன்லாம் தாங்க முடியாதுடா சாமி!

ஷிவானிக்கு வரவேற்பு
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் ஷிவானிக்கு அவங்க அம்மா இப்படித்தான் விளக்க மாத்தோட வரவேற்பு கொடுப்பாங்க என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அப்படியெல்லாம் ஆகக் கூடாதுன்னு தான் ஷிவானியை சிங்கப்பெண்ணாக மாற்றி வெளியே அனுப்புகிறார் பிக் பாஸ் என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

அப்பாவும் பொண்ணும்
மற்ற போட்டியாளர்கள் பக்குவமின்றி தங்கள் பிளான்களை சொன்னதாகவும், ஆரி தனது மகளுடன் நேரத்தை செலவிடப் போகிறேன் என்று சொன்னது தரமான விஷயம் தான். ரியோ கூட தனது குழந்தையுடன் கொஞ்ச வேண்டும் என்று சொல்லாமல், குடும்பத்தை விட்டு விட்டு மீண்டும் ஒரு காட்டுக்கு போகப் போறேன் என சொல்வது வேடிக்கை என்று விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











