For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஹார்ட்டுக்குள்ள பச்சக் குத்தியே.. ஒரு வாரத்தை ஓட்டிப்புட்டியே.. பிக்பாஸை பங்கம் பண்ணும் ஃபேன்ஸ்!

  |

  சென்னை: இந்த சீசனின் பிக் பாஸ் இயக்குநரைத் தான் ரசிகர்கள் வெறி கொண்டு தேடி வருகின்றனர்.

  முதல் வாரமே இப்படி ஒரு மொக்கை ஸ்க்ரிப்ட்டா ஏன் எழுதுனீங்க, ஆரம்பமே கன்டென்ட் சரியில்லன்னா அப்புறம் எப்படி தொடர்ந்து பார்க்கிறது என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

  பிக் பாஸ் வீட்டின் முதல் நாளில் தொடங்கிய ஹார்ட் பிரேக் டாஸ்க் வார இறுதி வரை ஜவ்வாக வந்து இழுத்தது என்றே பலரும் கருதி வருகின்றனர்.

  நான் பத்ரகாளி ஆகமாட்டேன்.. இங்கேயும் முத்த பிரச்சனை தீரலையா.. ரேகாவின் ஹார்ட் சீன் செம!

  அனுமார் வால்

  அனுமார் வால்

  வார கடைசியில் கமல் சார் வந்து ஒவ்வொருத்தரையும் லெஃப்ட் ரைட்டுன்னு வாங்குவாருன்னு பார்த்தா, மையமாக இருந்து கொண்டு, அனைவருக்கும் சமரசம் பேசும் சமாதான புறவாக வந்து சென்று விட்டார். மேலும், ஹார்ட் பிரேக் டாஸ்க்குக்கு ஒரு எண்டே கிடையாதா? அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே போகிறது என்று அப்செட் ஆகினர். சன் டே ஷோ சண்டை இல்லாமல் சற்றே போர் அடித்து விட்டது.

  மறுபடியும் முதல்ல இருந்தா

  மறுபடியும் முதல்ல இருந்தா

  மறுபடியும் முதல்ல இருந்தா என்பது போல, ஷிவானிக்கும், சுரேஷ் சக்கரவர்த்திக்கும் வரிசையா ஒவ்வொரு போட்டியாளர்களும் ஹார்ட் பிரேக் முத்திரையை குத்திக் குத்தி கடுப்பேத்தினார்கள். ரியோ ராஜ், எதுக்கு மறுபடியும் இன்ஸ்டா தலைவி ஷிவானிக்கு ஹார்ட் பிரேக் குத்தினார் என்று ஒரு கூட்டமே திட்டத் தொடங்கி விட்டது.

  ஒரே இடத்துல சுத்துது

  ஒரே இடத்துல சுத்துது

  அடுத்த இடத்துக்கு சட்டு புட்டுனு நகராம பிக் பாஸ் தமிழ் 4 ஒரே இடத்துல பீச் குதிரை மாதிரி சுத்தி சுத்தி வருதே என்றும் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் அப்செட்டாகி சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட தொடங்கி விட்டனர்.

  ரூட்ட மாத்துங்க

  ரூட்ட மாத்துங்க

  உடனடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த ரூட்ட மாத்துங்க ஹார்ட் பிரேக் டாஸ்க் சுத்தமா வொர்க்கவுட் ஆகல, அடுத்த வாரமாவது, காரசாரமான சண்டைகளையும், பிரச்சனைகளையும் கொண்டு வந்து லாக்டவுனில் போரடித்துப் போன எங்களுக்கு நல்ல ஒரு என்டர்டெயின்மென்ட் கொடுங்க என பொளேர் பொளேருன்னு பொளந்து வருகின்றனர்.

  ரொமான்ஸ் பண்ணுங்கப்பா

  ரொமான்ஸ் பண்ணுங்கப்பா

  இந்த சீசனில் முக்காவாசி கல்யாணம் ஆனதையும், ஆன்ட்டிகளையும், அங்கிள்களையுமே இறக்கி இருக்கீங்க, ஆரி புரோ பண்ற அட்வைஸ் எல்லாம் ஆஜித்துக்கே கேட்க முடியல, ஏதாவது ஒரு ஜோடிக்கு, ஃபேக்கா ஒரு காதல் ஸ்டோரியை ரெடி பண்ணி ஓவியா ஆரவ் மாதிரியும், கவின் லாஸ்லியா மாதிரியும் திரிய விடுங்க அப்பத்தான் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் என்றும் ஏகப்பட்ட ஐடியாக்களை கொடுக்கின்றனர்.

  கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை

  கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை

  ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே சொதப்புவதை போல, கொரோனா காலத்தில் பிக் பாஸ் நடத்த சான்ஸ் கிடைச்சும் நல்லா சொதப்புறீங்களே, உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை. நல்லா இறங்கி அடிச்சாத்தானே நிகழ்ச்சி நல்லா இருக்கும், சும்மா அழுகாச்சி சீரியல் போடுறதும், எச்ச தெறிக்கிற உப்புக்கும் பிரயோஜனம் இல்லாத சண்டை போடுறதெல்லாம் விட்டுட்டு நல்ல ஃபார்முக்கு வாங்க என்றும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பிக் பாஸ் இதையெல்லாம் கொஞ்சம் மனசுல வச்சா நல்லா இருக்கும்.

  English summary
  Netizens trolled Bigg Boss heart break concept such a boring one after this concept goes long in a weekend show.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X