புரமோவை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்.. உண்மை இல்லாதது.. என்னடா பிக் பாஸை இப்படி ஓட்டுறாங்களே!

சென்னை: பிக் பாஸ் தமிழ் 4ம் சீசனின் புரமோக்கள் இருப்பது போல, நிகழ்ச்சி இல்லை என்கிற குற்றச்சாட்டு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Recommended Video

Bigg Boss 4 Tamil | Day 11 | 15th October Episode - Filmibeat Tamil

அதை வைத்து ஜாலியாக போட்டுள்ள மீம்கள் சமூக வலைதளங்களில் வைரலாக டிரெண்டாகி வருகிறது.

இதற்கு முழுக் காரணமும் நேற்றுப் போட்ட காதல் டிராக் புரமோ தான் என்றும் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

எக்கச்சக்க எதிர்பார்ப்பு

எக்கச்சக்க எதிர்பார்ப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சி மீது தமிழ் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஆரம்பத்தில், இந்த நிகழ்ச்சிக்கு எதிராக மக்கள் அதிருப்தியை தெரிவித்து இருந்தாலும், போக போக, நிகழ்ச்சிக்கு வேற லெவல் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், 4ம் சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை நிறைவு செய்ய உள்ளது.

கமல்

கமல்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு ஹைலைட்டே உலக நாயகன் கமல் தான். கடந்த மூன்று சீசன்களையும் வெற்றிகரமாக நடத்தி முடித்த கமல் நான்காவது சீசனையும் சீரும் சிறப்பாக செய்து பிக் பாஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். வார இறுதி நாட்கள் வந்துவிட்டாலே நம்மவரின் தரிசனத்துக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பது வழக்கம்.

பரபரப்பை கிளப்பும் புரமோ

பரபரப்பை கிளப்பும் புரமோ

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட அதன் புரமோ வீடியோக்கள் தான் பரபரப்பை கிளப்பும் வகையில் உள்ளன. தினமும் போடும் புரமோ வீடியோக்களை பார்த்து விட்டு, இன்னைக்கு சரியான சம்பவம் இருக்கப் போகிறது, சண்டை வெடிக்கப் போகிறது என நிகழ்ச்சியை ஆவலுடன் பார்த்தால், அங்கே நமத்துப் போன பட்டாசாய் நிகழ்ச்சி இருந்தால், கடுப்பாகுமா ஆகாதா? என்றே ரசிகர்கள் திட்டத் தொடங்கி உள்ளனர்.

புரமோவை நம்பாதே

புரமோவை நம்பாதே

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் எனும் எம்.ஜி.ஆர் பாட்டை போட்டு, புரமோவை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்.. உண்மை இல்லாதது என உச்சகட்டமாக இப்போ மீம் போட்டு பங்கம் பண்ணி உள்ளனர். ஏற்கனவே குரூபிஸம், விஜய் டிவி பிரபலங்கள் மட்டுமே உள்ளனர் என ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளது. இதையெல்லாம் இந்த சீசன் எப்படித்தான் கடக்கப் போகிறதோ தெரியவில்லை.

கசியும் ரகசியங்கள்

கசியும் ரகசியங்கள்

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள கருப்பு ஆடுகள் அதன் சுவாரஸ்யங்களையும், போட்டியாளர்கள் குறித்த சீக்ரெட்களையும் சமூக வலைதளங்களில் கசிய விட்டு விடுவதால், பிக் பாஸ் தமிழ் 4 சீசன் மேல், இன்னும் ரசிகர்களுக்கு ஒரு பெரிய பிடிப்போ, நம்பிக்கையோ வரவில்லை என்ற பேச்சுக்களே அடிபட்டு வருகின்றன.

எல்லாத்துக்கும் அதுதான் காரணம்

எல்லாத்துக்கும் அதுதான் காரணம்

இப்படி திடீரென விஜய் டிவியின் பிக் பாஸ் புரமோக்களை ரசிகர்கள் ஓட்ட என்ன காரணம் என்று விசாரித்தால், நேற்று வெளியான அந்த காதல் புரமோ தானாம். பாலாஜிக்கும் கேபிக்கும் காதல் ஏற்பட்டது போல கோர்த்து விட்டு, கடைசியில் நிகழ்ச்சியில், சப்பையாக முடித்ததால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்த ஓட்டு ஓட்டுகின்றார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X