அலப்பறை.. 150 நாள் வீட்டுல தான் இருந்தோம்.. நாங்களும் கலந்துக்கலாமா.. வைரலாகும் பிக்பாஸ் 4 மீம்ஸ்!

சென்னை: பிக்பாஸ் 4வது சீசன் புரமோ தற்போது ரிலீசாகி ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.

4வது முறையாக உலக நாயகன் கமல்ஹாசனே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என்பது இந்த புரமோ வீடியோ மூலம் உறுதியாகி விட்டது.

சமீபத்தில், தாடியுடன் செம ஸ்டைலாக கமல் நடத்திய போட்டோஷூட்டின் போதே, அது பிக்பாஸ் புரமோவுக்கானது தான் என்பதை சொல்லி இருந்தோம்.

பிக்பாஸ் ஹேட்டர்ஸ்

பிக்பாஸ் ஹேட்டர்ஸ்

பிக்பாஸ் வீட்டுக்குள் நடப்பதை விட பிக்பாஸ் வீட்டை பற்றி பட்டித் தொட்டியெங்கும் நடக்கும் பேச்சுக்களும், தினமும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ட்ரோல் செய்து போடும் வீடியோக்களும் தான் வேற லெவல் டிரெண்டிங். எத்தனையோ யூடியூப் சேனல்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த வீடியோக்களை போட்டே டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தகக்து. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் இருப்பது போலவே ஹேட்டர்ஸ்களும் அதிகளவில் உள்ளனர்.

தெறிக்கும் மீம்கள்

தெறிக்கும் மீம்கள்

பிக்பாஸ் 4வது புரமோ ரிலீசான உடனடியாக அதனை கலாய்த்துத் தள்ளவும் நெட்டிசன்கள் தயாராகி விட்டனர். அடுத்த வனிதா அக்கா யாரு, மீரா மிதுன் யாரு, என்ன சண்டை நடக்கும், யார் யாரை லவ் பண்ணுவா என ரசிகர்கள் பரபரப்பாக மீம்களை போட்டு தெறிக்கவிடுகின்றனர். அவற்றில் சில உங்களின் பார்வைக்கு..

வந்துட்டான் வந்துட்டான்

வந்துட்டான் வந்துட்டான்

டிக்கிலோனா படத்தின் ஆரம்ப காட்சியில் கே.ஜி.எஃப் படத்தை கலாய்த்து, அவன் வந்துட்டான்.. வந்துட்டான் வந்துட்டான் என வசனம் இடம்பெற்று இருக்கும், அந்த புது டெம்பிளேட்டை ஆவி பறக்க சுட சுட அப்படியே பிக்பாஸ் சீசன் 4க்காக மீம் க்ரியேட்டர்கள் இறக்கி உள்ளனர்.

அடி.. அடி

அடி.. அடி

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானதை கொண்டாடும் விதமாக பிக்பாஸ் ரசிகர்கள் ஏகப்பட்ட வரவேற்பு மீம்களையும் போட்டு வருகின்றனர். கோபி, சுதாகரின் பரிதாபங்கள் யூடியூப் வீடியோக்களின் டெம்பிளேட்களும் மீம் மெட்டீரியலாக மாறியுள்ள நிலையில், அடி.. அடி.. என இத்தனை நாள் எப்போ போடுவாங்கன்னு காத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பையும் கொடுத்து வருகின்றனர்.

கமலின் கம்பீரமான பேச்சு

கமலின் கம்பீரமான பேச்சு

எந்த ஒரு பில்டப்பும் இல்லாமல், டக்குன்னு பிக்பாஸ் புரமோவே இன்னைக்கு போட்டுட்டாங்க, அதிலும் உலக நாயகன் கமல்ஹாசன் செம ஸ்மார்ட்டாக கொரோனா குறித்தும், மீண்டும் எல்லாரும் வேலைக்கு போறாங்க.. நாங்களும் வந்துட்டோம் என பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த அறிமுகத்தை சொல்வதை பல ரசிகர்களும் கமலின் கம்பீரமான பேச்சு சூப்பர் என்று பதிவிட்டு வருகின்றனர்.

கப் எங்களுக்குத்தான்

கப் எங்களுக்குத்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியை ட்ரோல் செய்யும் ஹேட்டர்ஸ்கள், இவனுக இந்த கொரோனா டைம்லயும் வந்து இம்சை கொடுக்கிறானுங்களே என்றும், நாங்களும் 150 நாளைக்கு மேல வீட்ல தான் இருக்கோம்.. உண்மையா கப் எங்களுக்குத் தான் தரணும்.. அடிச்சது எங்களை.. கப் அவங்களுக்காக என ட்ரோல் செய்ய தொடங்கி விட்டனர்.

நாங்க போட்டிக்கு வரலாமா

நாங்க போட்டிக்கு வரலாமா

5 மாசமா கொரோனா காரணமாக 150 நாட்களுக்கும் மேல வீட்டிலேயே இருக்க நாங்க போட்டிக்கு வரலாமா என பரோட்டா சூரியின் காமெடி மீமை போட்டும் நெட்டிசன்கள் லந்து செய்து வருகின்றனர். போட்டியாளர்கள் யார், பரபரப்பு எப்படி இருக்கப் போகிறது, என்ன எல்லாம் சர்ச்சைகள் கிளம்ப போகிறது. மாஸ்க் அணிவார்களா? சமூக இடைவெளி பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் இருக்குமா? போன்ற பல கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X