40 கதைகள் கேட்டுத் தூங்கிட்டேன்.. ஆடியோ லாஞ்ச் பேச்சால் வம்பில் சிக்கிய அஸ்வின்.. பறக்கும் மீம்கள்!

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் அஸ்வின் குமார் ஹீரோவாக என்ன சொல்ல போகிறாய் படத்தில் நடித்து வருகிறார்.

Recommended Video

Ashwin Speech | இதுவரை 40 கதை கேட்டு தூங்கிட்டேன் | Enna Solla Pogirai Ashwin funny Speech

கடந்த டிசம்பர் 6ம் தேதி சென்னையில் அந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் அரங்கேறியது.

அந்த ஆடியோ லாஞ்சில் 40 கதைகள் கேட்டுத் தூங்கி விட்டேன் என அவர் பேசியதால் நெட்டிசன்கள் மீம்களை போட்டு அஸ்வினை வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஹீரோவான அஸ்வின்

ஹீரோவான அஸ்வின்

திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த குக் வித் கோமாளி அஸ்வின் குமார் இயக்குநர் ஹரிஹரன் இயக்கத்தில் என்ன சொல்ல போகிறாய் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். சென்னையில் நடைபெற்ற அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது.

40 கதைகள் கேட்டு தூங்கிட்டேன்

40 கதைகள் கேட்டு தூங்கிட்டேன்

அந்த விழாவில் பேசிய நடிகர் அஸ்வின் குமார் எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்குங்க.. பொதுவாக கதை பிடிக்கவில்லை என்றால் இயக்குநர்கள் கதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே தூங்கிவிடுவேன். இதுவரை 40 கதைகள் கேட்டு அப்படி தூங்கி இருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட முதல் கதை ஹரிஹரனோட கதை தான் என பேசி இருந்தார்.

ஆணவத்தில் அஸ்வின்

ஆணவத்தில் அஸ்வின்

இயக்குநர்கள் கஷ்டப்பட்டு ஹீரோவுக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கும் போது அதை முழுதாக கூட கேட்க முடியாத அளவுக்கு அப்படி எத்தனை படங்களில் அஸ்வின் நடித்து விட்டார். இன்னும் ஒரு படம் கூட வெளியாகாத நிலையில், கோலிவுட் இயக்குநர்களை இப்படி பகைத்துக் கொண்டால் எப்படி அஸ்வினுக்கு அப்படி என்ன ஆணவம் என நெட்டிசன்கள் மீம்களாக போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்.

தலையில் மண்

தலையில் மண்

வேறு யாருமே தேவையில்லைங்க.. தனக்குத் தானே தலையில் மண் வாரிப் போட்டுக் கொண்டார் குக் வித் கோமாளி அஸ்வின் என்று நெட்டிசன்கள் பங்கமாக மீம் போட்டுக் கலாய்த்து வருகின்றனர். என்ன சொல்ல போகிறாய் இசை வெளியீட்டில் அஸ்வின் என்ன சொல்ல போகிறாருன்னு பார்த்தா இப்படி சொல்லிட்டாரே என கலாய்த்து வருகின்றனர்.

2 விஜய் 4 ரஜினி

2 விஜய் 4 ரஜினி

ஆடியோ லாஞ்சிற்குள் வந்தவுடன் அஸ்வின் தன்னை 2 விஜய் ஆகவும் 4 ரஜினியாகவும் உணர்கிறார் என மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். இதற்கு மேல் ஆடியோ லாஞ்சில் அஸ்வின் இப்படி பேசவே கூடாது என நெட்டிசன்கள் மீம்களாக போட்டு வச்சி செய்து வருகின்றனர்.

ஒரே ஒரு ஆடியோ லாஞ்ச்

ஒரே ஒரு ஆடியோ லாஞ்ச்

ஒரே ஒரு ஆடியோ லாஞ்ச் தான் டோட்டல் கரியரும் க்ளோஸ் என வடிவேலு மீம்களை போட்டு அஸ்வின் தெரியாமல் உளறியதை பார்த்து படையெடுத்து தாக்கி வருகின்றனர். ஹீரோவான பின்பும் இவர் கோமாளியாகவே இருக்கிறாரே என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X