அட்லி என்றாலே காப்பிதானா.. அதுக்காக பெயரைக்கூடவா காப்பி அடிப்பீங்க.. வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ் !

சென்னை : அட்லி படத்தை தான் காப்பி அடிக்கிறார் என்றால் தனது குழந்தைக்கும் காப்பி அடித்து பெயர் வைத்துள்ளார் என நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து வருகினற்னர்.

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான ஒருவராக திகழ்ந்து வருபவர் அட்லீ.

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லி, எந்திரன், நண்பன் போன்ற படங்களில் இணை இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

Netizens trolled Director atlee copied from his son name meer

இயக்குநர் அட்லி : மதுரையை சேர்ந்த அட்லீ, சினிமா உலகில் இயக்குனர், திரைக்கதை எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று தெறி, ஹிட் படங்களை கொடுத்தார்.

ஹிட் படங்கள் : விஜயை வைத்து இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அட்லி அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது, இவர் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி பாலிவுட்லும் சாதனை படைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்திருக்கிறார்.

பெயர்கூடவா காப்பி : சமீபத்தில் அட்லீ - பிரியாவிற்கு கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். மேலும், அட்லீ தனது மகனுக்கு மீர் என்று பெயர் வைத்து இருப்பதாக அறிவித்தார். அதாவது, மீர் என்ற பெயர் ஷாருக்கானின் தந்தையின் பெயர் என்று தெரிந்து கொண்ட ரசிகர்களில் சிலர், படத்தைத்தான் காப்பி அடித்து எடுக்குறீங்க என்று பார்த்தால் குழந்தையின் பெயரைக்கூடவா சொந்தமாக யோசிக்கமாட்டீங்க என்று இணையத்தில் அட்லியை மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

Netizens trolled Director atlee copied from his son name meer

ஜவானும் காப்பியா : அட்லி இதுவரை இயக்கிய நான்கு படங்களும் அட்டை காப்பி என்று கோலிவுட்டில் ரசிகர்கள் கிண்டலடித்து வரும் நிலையில், தற்போது அவர் இயக்கி வரும் இந்தி படமான ஜவானும்,கமல் நடித்த ஒரு கைதியின் டைரி திரைப்படத்தின் காப்பி என்று ஒரு தகவல் பரவி வருகிறது என்னத்தான் கதை காப்பி என்று விமர்சனம் எழுந்தாலும், இவர் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுப்பதால், பெரிய அளவில் வெற்றி பெற்றுவிடுகிறார்.உண்மையில் அட்லிக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்துவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X