உங்க வேலையை பாருங்க மோகன் ஜி.. தோனி பத்தி நீங்க பேசாதீங்க.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்
சென்னை: நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியை காண திரை பிரபலங்கள் பலரும் திரண்டு வந்திருந்தனர். இது ஒரு பக்கம் இருக்க, ஆர்சிபி அணியிடம் சிஎஸ்கே தோற்று போனதால் ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். மேலும் பிரபலங்களும் சென்னை டீமை பங்கமாய் கலாய்த்து வரும் நிலையில், திரெளபதி இயக்குநர் மோகன் ஜி தோனி பற்றி கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நேற்று இரவு நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை தோற்கடித்தது. அதுவும் பிட்ச் சரியில்லை அதனால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என சிஎஸ்கே கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் தெரிவித்தார். பின்பு, வெறும் 50 ரன்கள் வித்தியாசத்தில் தான் தோல்வியுற்றோம் பெரிய தோல்வி எல்லாம் கிடையாது என்றும் தெரிவித்தார். மிடில் ஆர்டரில் இறங்கிய சிவம் துபே சொதப்பியது என அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து 10ஆவது ஆளாக தோனி களமிறங்கி 30 ரன்களுக்கு மேல் குவித்தது மட்டுமே நல்லதாக தெரிகிறது என்றும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், ஒரு 100 ரன்களை கடக்க இப்படியா டொக்கு டொக்குனு ஆடுவது என சென்னை அணியை பங்கமாய் கலாய்த்தனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், நேற்று நடந்த ஆட்டத்தினை திரை பிரபலங்கள் பலரும் கணடு களித்தனர். அஜித் மனைவி ஷாலினி தனது மகனுடன் வந்து ஐபிஎல் போட்டியை கண்டு களித்தார். அதேபோன்று பிக்பாஸ் பிரபலம் செளந்தர்யா, தொலைக்காட்சி சீரியல் நடிகைகளும் கண்டு களித்தனர். ஆனால், ஆர்சிபி ரசிகர்கள் சென்னை அணியை பங்கமாய் கலாய்த்து பேசி வருகின்றனர். நெட்டிசன்களில் சென்னை அணியை மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரை அளவுக்கு கொடுத்த பில்டப் எல்லாம் போச்சா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
எப்போதும் வெற்றி பெற முடியாது: இதனிடையே என்னப்பா சென்னை டீம் ஒரு மேட்ச் தான தோத்திருக்கு. அதுக்கே இப்படி ஓவர் டோஸ் விடுறீங்க என திரெளபதி இயக்குநர் மோகன் ஜி பொங்கியிருக்கிறார். தனது எக்ஸ் தளத்தில் தல தோனியையும் புகழ்ந்து பேசியிருக்கிறார். அதில், பொதுவாக யாருக்கும் சண்டை இல்லாமல் சமாதானப்படுத்துவது போல், எப்போதும் ஒரு அணி வெற்றி பெற முடியாது. அதேமாதிரி சிறப்பாகவும் செயல்பட முடியாது. இதில் தோனி மட்டும் விதிவிலக்கா என்ன. அணியின் வெற்றிக்காக தனியொரு ஆளாக தோனி மட்டுமே எப்போதும் ஓடிக்கொண்டிருக்க முடியாது. தோனி கிரிக்கெட் ஜாம்பவானாக இருக்கிறார். நேற்றைய நாள் ஆர்சிபிக்கானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என பதிவிட்டிருக்கிறார்.

நெட்டிசன்கள் பங்கம்: இதற்கு நெட்டிசன்கள் நீ இறங்கி ஆடியிருந்தால் நொட்டியிருப்ப. வந்துட்டார்யா கருத்து சொல்ல என நெட்டிசன்கள் தாறுமாறாக மோகன் ஜியை கலாய்க்க தொடங்கிவிட்டனர். இது ஒரு பக்கம் இருக்க என்னது மோகன் ஜியை கலாய்க்கிறீங்களே என அவரது ரசிகர்களும் அவருக்கு ஆதரவாக பேச தொடங்கியதால் ஒரு சாதாரண போஸ்ட் களேபரமாக்கியுள்ளது. வடிவேலு கூறுவது போல் சமாதானம் சொல்ல வந்த என்னை இப்படி கலாய்க்கிறிங்களே இது நியாயமா என்ற ரேஞ்சுக்கு பங்கம் செய்து வருகின்றனர். வந்தோமா 4 படம் எடுத்தோமா இல்லாம கருத்து சொல்ல வந்துட்டாரு என மரண பங்கமாய் கலாய்க்க தொடங்கிவிட்டனர். சேர்த்து வைத்த மொத்த வன்மத்தையும் மோகன் ஜி பக்கம் திரும்பியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











