அண்ணே அந்த ஜிஎஸ்டி பில்?.. கங்குவா கலெக்‌ஷன்.. ஞானவேல் ராஜாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்!

சென்னை: சூர்யா நடிப்பில் இதுவரை வெளியான எந்தவொரு படமும் இந்த அளவுக்கு பட்ஜெட்டிலும் எடுக்கப்படவில்லை. அதே போல இந்தளவுக்கு முதல் நாள் ஓபனிங்கும் செய்யவில்லை என ஞானவேல்ராஜா அதிகாரப்பூர்வ வசூலையே அறிவித்துள்ளார். முதல் நாளில் அதிகபட்சமாக உலகளவில் கங்குவா திரைப்படம் 58.62 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதை அறிவித்துள்ளார்.

ஸ்டூடியோ க்ரீன் சோஷியல் மீடியா பக்கத்தில் சற்றுமுன் அதிகாரப்பூர்வ முதல் நாள் வசூல் வெளியிடப்பட்ட நிலையில், நெட்டிசன்கள் பலர் அண்ணே அந்த ஜிஎஸ்டி பில் அனுப்புங்கண்ணே என்றும் அந்த ஜிஎஸ்டி சலான் எங்கே சார்? என்றும் கேள்விகளை எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

kanguva box office suriya

ஏகப்பட்ட ட்ரோல் மீம்கள் கங்குவா படத்தின் பாக்ஸ் ஆபிஸை சுற்றி டிரெண்டாகி வருவதையும் பார்க்க முடிகிறது. ஏனென்றால் படத்தின் ரிலீஸுக்கு முன்பாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கங்குவா படத்தின் முதல் நாள் வசூலை ஜிஎஸ்டி பில்லுடன் வெளியிடுவதாக கூறியிருந்தார்.

ஓவர் பேச்சு உடம்புக்கு ஆகாது: நடிகர் சூர்யா, இயக்குநர் சிறுத்தை சிவா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என 3 பேரும் கங்குவா படத்தை பெரிதளவில் புரமோட் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் அவர்கள் உருட்டிய உருட்டுகளை எல்லாம் படத்தை பார்த்து தலைவலி வந்த ரசிகர்கள் ட்ரோல் செய்தும் கெட்ட வார்த்தைகளால் திட்டியும் ஓவர் பேச்சு உடம்புக்கு ஆகாது என பொங்கி விட்டனர்.

kanguva box office suriya

முதல் நாளே இத்தனை கோடியா?: தமிழ்நாட்டிலேயே கங்குவா திரைப்படம் 8 கோடி ரூபாய் தான் முதல் நாள் வசூல் செய்தது என்றும் இந்தி பெல்ட்டில் 4 கோடி ரூபாய் என்றும் கேரளா, ஆந்திரா போன்ற இடங்களில் தலா 6 கோடி வசூல் வந்திருப்பதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் ஒட்டுமொத்தமாக இந்த படம் முதல் நாளில் 40 கோடிக்கும் குறைவாகத்தான் வசூல் செய்திருக்கும் எனக் கூறி வரும் நிலையில், அதெல்லாம் உண்மையில்லை பாஸ் அதிகாரப்பூர்வமாக கங்குவா முதல் நாளில் 58.62 கோடி தான் வசூல் செய்துள்ளது என ஞானவேல்ராஜா அறிவித்துள்ளார்.

kanguva box office suriya

ஜிஎஸ்டி பில் எங்கே?: அந்த ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் அந்த ஜிஎஸ்டி பில்லை அப்படியே ஒரு ட்வீட்டாக தட்டி விடுங்க ஞானவேல்ராஜா இங்கே எல்லாரும் உங்களை நம்பாமல் கலாய்க்கிறாங்க என மீம் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர். இயக்குநர் எச். வினோத் சொன்னது போல நடிகர்களை திருப்திப்படுத்தவே பொய்யான பாக்ஸ் ஆபிஸ் நம்பர்கள் போடப்படுகிறதா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். தேவரா படமெல்லாம் வொர்த்தே இல்லை என்றும் அதன் முதல் நாள் வசூல் எல்லாம் சுத்த மோசடி என்றும் ஆந்திராவில் ஏகப்பட்ட சர்ச்சைகள் சமீபத்தில் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

kanguva box office suriya

வெற்றி விழா பாஸ் ரெடியா இருக்கு: மேலும், கங்குவா இசை வெளியீட்டு விழா பாஸை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இதே நேரு ஸ்டேடியத்தில் வெற்றி விழாவையும் விரைவில் நடத்துவேன். அதே பாஸை வைத்துக் கொண்டு உள்ளே வரலாம் என ஞானவேல்ராஜா பேசிய வீடியோக்களையும் ஷேர் செய்து வெற்றி விழா பாஸ் ரெடியா இருக்கு, இத்தனை கோடி முதல் நாளே வசூல் செய்திருக்கு சீக்கிரமே 2000 கோடி வசூல் செய்து விடும் கங்குவா அந்த வெற்றி விழா டேட்டையும் சொல்லிடுங்கண்ணா என கிண்டல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X