சிரிச்சே செத்துட்டேன்.. இப்படியெல்லாமா எடுப்பாங்க.. பங்கமாக கலாய்க்கப்படும் பிரபல சீரியல் சீன்!
மும்பை: பிரபல சீரியல் காட்சியை ரசிகர்கள் வேற லெவலில் வச்சு செய்து வருகின்றனர்.
அந்த காட்சியை பார்த்தால், நீங்களும் அதை விட கேவலமாக கலாய்த்து தள்ளுவது நிச்சயம்.
எப்படி அந்த டைரக்டர் இப்படியெல்லாம் சீன் யோசிச்சு எடுத்தார் என கிறிஸ்டோபர் நோலனே குழம்பி விடுவார் எனவும் பங்கம் பண்ணி வருகின்றனர்.
அப்படி என்ன சீன்
பிரபல இந்தி சீரியல் ஒன்றில், நடிகை ஹெல்லி ஷா, ஷூட் கேசில் கால் தடுக்கி, சுவற்றில் மோதிக் கொண்டு, மயங்கிய நிலையில், ஷூட் கேஸில் பக்காவாக விழுகிறார். அந்த ஷூட் கேஸும் ஆட்டோமேடிக்காக மூடிக் கொள்ள நாயகன், அந்த ஷூட் கேஸை எடுத்து ஏன் நீச்சல் குளத்தில் போடுகிறார் என்றே தெரியாமல் அந்த காட்சி செல்கிறது.
சிரிச்சே செத்துட்டேன்
இந்த காட்சியை பார்த்த இணையதள வாசிகள் எப்படி சார் இப்படி ஒரு சீனை யோசிச்சீங்க என்றும், இதைப் பார்த்த உடன் சிரிச்சே செத்துட்டேன் என்றும் ஏகப்பட்ட ட்ரோல்களை போட்டு பங்கமாக கலாய்த்து வருகின்றனர். அந்த காட்சி தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல பரவலாக ஷேர் செய்யபப்ட்டு கழுவி ஊற்றப்பட்டு வருகிறது.

என்ன சீரியல்
கலர்ஸ் டிவி சேனலில் ஒளிபரப்பாகும் ‘Ishq Mein Marjawan 2' என்கிற சீரியல் தான் அது என்றும், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அந்த சீரியலில் தான் இப்படியொரு அதி புத்திசாலித்தனம் நிறைந்த காட்சியை அந்த சீரியலின் இயக்குநர் நோயல் ஸ்மித் இயக்கினார் என யோசித்து வருகின்றனர்.
டார்க் வெப்சீரிஸை விட
டார்க் வெப்சீரிஸை விட மிகவும் குழப்பமானது என்றும், இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனே ரசிகர்களை இப்படி குழப்பி இருக்க மாட்டார் என்றும் ஏகப்பட்ட மீம்கள் பறந்து வருகின்றன. பெட்டிக்குள் அவர் விழுந்தது குறித்தும், அது எப்படி தானாக மூடியது என்பது குறித்தும் ரசிகர்கள் கிண்டலாக விவாதித்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











