For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்டர்டெயினிங் எங்க இருக்கு.. பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க ஜெயம் ரவி.. பங்கம் பண்ணும் ஃபேன்ஸ்!

  |

  சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி சிறப்பு அழைப்பாளராக வந்த ஜெயம் ரவியையும் விடாமல் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

  சூப்பரா விளையாடுறீங்க என ஜெயம் ரவி மேடை நாகரீகத்திற்காக பாராட்டிய நிலையில், இப்படி உசுப்பேத்தினா ஆஜீத், ஷிவானி எல்லாம் அதையே கன்ட்டினியூ பண்ணுவாங்களே ஜெயம் ரவி சார் என நெட்டிசன்கள் புலம்பித் தள்ளி வருகின்றனர்.

  ஜெயம் ரவியின் தன்னடக்கமான பேச்சையும் அவரை பார்த்த சந்தோஷத்தையும் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

  ஆரியை எதிர்த்தால்

  "ஆரியை எதிர்த்தால்.... அப்போ சம்யுக்தா & அர்ச்சனா, இப்போ அனிதா..... நாளை ரம்யா இருக்கலாம்... இல்ல ரியோ???? #ஆரி_ஆர்மி" என ஆரியின் ஆர்மியினர் நேற்றே ஆரி சேவ் ஆனதும் இன்றைய முதல் புரமோவில் தெம்பாக ட்வீட் போட்டு வருகின்றனர். ஆரிக்கு என்ன பிளான் வச்சிருக்காங்கன்னு விஜய் டிவிக்கு மட்டுமே வெளிச்சம் என்பது இவர்களுக்கு புரியவில்லை.

  கை வந்த கலை

  சனிக்கிழமை எபிசோடிலேயே இந்த வாரமும் ஆரி சேவ் செய்யப்பட்ட நிலையில், டேய் இதெல்லாம் இப்போ எங்களுக்கு கை வந்த கலையா ஆகிருச்சு டா என கமெண்ட் செய்து ஆரி ஆர்மியினர் பெருமை பேசி வருகின்றனர். இன்னும் 3 வாரங்கள் இருப்பதால், நிச்சயம் ஆரி பைனல்ஸ்க்கு போவார் என்பது உறுதியாகி உள்ளது.

  எல்லாம் கிருப கிருப

  80 நாட்களை கடந்து இந்த வாரமும் பிக் பாஸ் வீட்டில் ஆஜீத் சேவ் ஆனதை ஏகப்பட்ட ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். டேலன்ட்லாம் ஒண்ணும் இல்லை பிரதர் எல்லாம் கிருப.. கிருப என கிருப கிருப மீம் டெம்பிளேட்டை போட்டு பங்கம் செய்து வருகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள்.

  பிரஷ், பட்ஸ்

  நீ ஆரி ப்ரோவுக்கு பிரஷ்ஷும் பட்ஸும் கொடுத்தை கூடத் தாங்கிப்பேன்.. ஆனால், அதுக்கு கொடுத்த பாரு ஒரு விளக்கம்.. அதை மட்டும் தாங்கிக்கவே முடியாது என அனிதாவை வச்சு விளாசி வருகின்றனர் ஆரி ரசிகர்கள். மேலும், உங்க மனசு அழுக்கா இருக்கு அதை தேச்சி துவைங்கன்னு பிரஷ்ஷையும் மத்தவங்களை ரொம்ப குடையாதீங்கன்னு பட்ஸையும் அனிதா கொடுத்தார் என விளக்கம் வேற கொடுத்து வருகின்றனர்.

  ஜெயம் ரவி தரிசனம்

  பூமி திரைப்படம் வரும் பொங்கலுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ள நிலையில், பூமி படத்தின் டிரைலரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயம் ரவி வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் புரமோவில் ஜெயம் ரவியை ரசிகர்கள் பார்த்ததும் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர். பொன்னியின் செல்வனுக்கு ஏகப்பட்ட பேர் வெயிட்டிங். எப்போ ஷூட்டிங் தொடங்குமோ?

  சாப்பிட்டுக் கொண்டே

  பிக் பாஸ் வீட்டில் எப்போ பார்த்தாலும் ஷிவானி நாராயணன் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பதை காட்டுகின்றனர். அதன் மொத்த கலெக்‌ஷன் போட்டோக்களையும் எடுத்து போட்டு, எதுக்கு இவர் இன்னும் உள்ளே இருக்கிறார் என்கிற கேள்வியை வழக்கம் போல இந்த வாரமும் நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.

  தனி ஒருவன் ஆரி

  சனிக்கிழமை நிகழ்ச்சியில் கூட ஆரியிடம் பேச ஒருவரும் இல்லாமல் அவர் தனியாக இருக்கும் காட்சி ரசிகர்களை மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அந்த மனுஷனையும் மதிச்சி கொஞ்சம் கூட சேர்த்து பேசுங்கப்பா, ஏன் இப்படி ஒதுக்குறீங்க என்று ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சோலோவாக விளையாட வேண்டும் என அனைவரையும் துப்பாக்கியால் சுட்டால் இப்படித்தான் தனியாக நிற்க வேண்டும் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

  இந்த SCRIPT முன்னாடியே கேட்டிருந்தா பண்ணிருக்கமாட்டேன் | MEGHA AKASH CHAT PART - 01 | Filmibeat

  என்டர்டெயின்மென்டா எங்க?

  எல்லாரும் சூப்பரா விளையாடுறீங்க, நல்லா என்டர்டெயின்மென்டா இருக்கு தொடர்ந்து பார்க்கிறேன் என ஜெயம் ரவி சொன்னதையும் சும்மா விடாமல், என்டர்டெயின்மென்டா எங்க சார் இருக்கு, பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க சார், இல்லைன்னா அந்த ஆஜீத், ஷிவானி எல்லாம் தாங்கள் செய்வது தான் சரி என அப்படியே தொடர்ந்து இன்னமும் சீன் போடுவாங்க என பங்கம் செய்து வருகின்றனர்.

  English summary
  Netizens trolled Jayam Ravi after he praising Bigg Boss contestants in today first promo. Bhoomi trailer will launch in Bigg Boss show sources claimed.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X