ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்தது ஒரு தப்பா.. மோசமான கமெண்ட் ..கொந்தளித்த பிரபலம்!

சென்னை: ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு நடிகர் கமல் கார் பரிசாக கொடுத்தது குறித்து இணையத்தில் பரவி வரும் மோசமான கருத்துக்கு அந்தணன் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் பேருந்தில் முதல் பெண் ஓட்டுனராக பணியமர்த்தப்பட்டார்.

ஷர்மிளா பேருந்து ஓட்டும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையம், ஊடகம் மற்றும் பத்திரிக்கையில் பகிரப்பட்டு வைரலானதால், ஷர்மிளா பிரபலமானார்.

ஓட்டுநர் ஷர்மிளா: இதையடுத்து, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஷர்மிளாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பின் திமுக எம்.பி. கனிமொழி, ஷர்மிளாவை பேருந்தில் பயணித்தபடியே சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது, அந்த தனியார் பேருந்தின் நடத்துனர் கனிமொழி எம்பி என்று கூட பார்க்காமல் டிக்கெட் எடுங்க, டிக்கெட் என்று மிரட்டும் வகையில் பேசி இருந்தார்.

Netizens Trolled Kamal haasan for gifting a car to driver Sharmila

பணிநீக்கம்: இந்த சந்திப்பு நிகழ்ந்த ஒரு சில மணி நேரத்தில் பேருந்து ஓட்டுநர் பணியிலிருந்து ஷர்மிளா நீக்கப்பட்டார். ஷர்மிளா பணியில் இருந்து நீக்கப்பட்டதை அறிந்த கனிமொழி பெண் ஓட்டுநர் ஷர்மிளாவை செல்போனில் அழைத்து,பேருந்து உரிமையாளரிடம் பேசி வேலை வாங்கி தருவதாக கூறினார். ஆனால்,ஷர்மிளா வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

கார் பரிசு: இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் ஓட்டுநர் ஷர்மிளாவை நேரில் அழைத்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மாருதி சுஸூகி நிறுவனத்தின் எர்டிகா காரை பரிசாக அளித்துள்ளார். ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல, தன் வயதையொத்த பெண்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழக்கூடியவர் என்று கமல் அவரை வெகுவாக பாராட்டி இருந்தார்.

பெண்களுக்கு முன் உதாரணம்: கமல் காரை பரிசாக கொடுத்தது குறித்து இணையத்தில் படு மோசமான கமெண்ட்டுகள் பரவி வருவதால், டென்ஷனான வலைப்பேச்சு அந்தணன் தனது யூடியூப் சேனலில் காட்டமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு பெண் இந்த சமூதாயத்தில் துணிச்சலாக முன் வந்து ஓட்டுநர் வேலை பார்ப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. ஷர்மிளாவின் தைரியத்தை பாராட்டி, அனைத்து பெண்களுக்கும் அவர் ஓர் முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்றுதான் கமல் அவரை பாராட்டி காரை பரிசாக அளித்தார்.

படுமோசமாக விமர்சனம்: ஆனால், சோஷியல் மீடியாவில் நான் எழுத்தாளராக மதிக்கும் பட்டுக்கோட்டை பிரபாகரன், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்பவர்களுக்குத்தான் இதுபோன்ற மரியாதை கிடைக்கும் போல என்று பதிவிட்டுள்ளார். அதேபோல பல இணையவாசிகள் பிக் பாஸுக்கு அடுத்த பிரபலம் ரெடி என்றும்,நல்லவேளை ஆண்டவர் கிஸ் கொடுக்காமல் அனுப்பிவிட்டரே என்று படுமோசமாக விமர்சித்து வருகின்றனர். இப்படி எல்லாம் விமர்சனம் செய்தால் யார் பெண்களுக்கு உதவி செய்ய முன்வருவார் என்று கோபத்துடன் அந்த வீடியோவில் அந்தணன் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X