இந்தியன் 2 ஷூட்டிங்கில் இருந்து வந்துட்டாரா கமல்?.. கல்கி லுக்கை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை: பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி திரைப்படம் இந்த மாதம் ஜூன் 27-ஆம் தேதி வெளியாகிறது. அந்தப் படத்தின் அட்டகாசமான டிரெய்லர் நேற்று பல்வேறு மொழிகளில் வெளியானது. தெலுங்கு மற்றும் இந்தி டிரெய்லர் 7:00 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு 7:15 மணிக்கு வெளியானது. அதன் பின்னர் மலையாளம், கன்னடம் மற்றும் கடைசியாக கமல்ஹாசன் தமிழ் டிரெய்லரை வெளியிட்டார்.

கல்கி படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்த நிலையில், தற்போது டிரெய்லரில் இடம்பெற்றுள்ள அவரது காட்சியை பார்த்த ரசிகர்கள் அதனை கன்ஃபார்ம் செய்து விட்டனர். கல்கி படத்தின் முதல் பாகத்தில் கமல்ஹாசன் வெறும் 15 நிமிடக் காட்சிகளில் மட்டுமே வருவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Kamal Haasan Prabhas Kalki Indian 2 2

கல்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசன் அதிகமாக வருவார் என்றும் தான் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று வெளியான கல்கி திரைப்படத்தில் இடம்பெற்ற கமல்ஹாசனின் காட்சியை பார்த்த ரசிகர்கள் இந்தியன் 2 படத்திலிருந்து அப்படியே வந்து நடித்து விட்டாரா? என கேட்டு கலாய்த்து வருகின்றனர்.

கல்கி அவதாரம் இல்லை: கல்கி 2898 ஏடி படத்தில் பிரபாஸ் பைரவா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், கமல்ஹாசன் தான் கல்கி அவதாரமா? என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கமல்ஹாசனுக்கு விகாரமான தோற்றத்துடன் வில்லத்தனமான நடிப்பை கொடுத்துள்ள நிலையில் நிச்சயம் அவர் கல்கி அவதாரமாக நடித்திருக்க மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.

Kamal Haasan Prabhas Kalki Indian 2 2

ஒரே ஒரு வசனம்: கல்கி டிரெய்லரில் கமல்ஹாசன் மூச்சு விட்டு முட்டக்கண்ணை வைத்து முறைப்பது போலவும் ஒருவர் காதருகே வந்து "கவலைப்படாதே புது பிரபஞ்சம் ஒன்று உருவாகிறது" எனக் கூறும் காட்சி மட்டுமே இடம்பெற்றுள்ளது. அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோனுக்கு ஏகப்பட்ட காட்சிகள் உள்ள நிலையில், கமலுக்கான காட்சி கொஞ்சமாகத்தான் உள்ளன.

இந்தியன் தாத்தா கெட்டப்: பிராஸ்தட்டிக் மேக்கப் போட்டு நடிக்க வேண்டும் என்றால் உடனடியாக கமல்ஹாசனை கூப்பிடுங்க என நாக் அஸ்வின் நினைத்து இருப்பார் போல, இந்தியன் 2 படத்தில் 90 வயது தாத்தாவாக கமல் நடித்துள்ள நிலையில், அதே போன்ற லுக்கில் கல்கி படத்தில் அவர் வந்து செல்கிறார் என்றும் இந்தியன் 2 செட்டில் இருந்து அப்படியே நேராக வந்து கமல்ஹாசன் நடித்து விட்டாரா? என்றும் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X