கோர்த்து விடுறதுன்னா இதுதானா கமல்.. ஆரி பூரி ஆகாம இருந்தா சரி.. சண்டையை எதிர்பார்க்கும் ரசிகர்கள்!

சென்னை: பாலா, ஷிவானி காதல் விவகாரம் குறித்து கன்ஃபெஷன் ரூமில் ஆரி பேசிய விவகாரத்தை கமல் இழுத்து விட 3வது புரமோவை பார்த்த ரசிகர்கள் எக்கச்சக்க ரியாக்‌ஷன்களை கொட்டி வருகின்றனர்.

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி போன வாரம் மாதிரி இல்லாமல், சரவெடியாய் இருக்கும் என்றே எதிர்பார்க்கின்றனர்.

மறுபடியும் கமல் கண்டிப்பது போல கண்டித்து செல்லம்மா தட்டிக் கொடுத்துவிடுவாரோ என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

போர் மூழுமோ

"அடடா... ஆண்டவர் ஆரியை உள்ள இழுத்துவிட பார்க்கிறாரே!... மறுபடியும் போர் மூழுமா?.. என இந்த பிக் பாஸ் ரசிகர், ஆரிக்கும் பாலாவுக்கும் சண்டை நடக்க வேண்டும் என்கிற ஆதங்கத்தில் கமெண்ட் அடித்துள்ளார். ஆனால், அதெல்லாம் கமல் சார் ஷோவில் நடக்காது என்பதை ரசிகர்கள் எப்போதான் புரிந்து கொள்வார்களோ?

சிரிப்பில் உள்குத்து

பாலாவின் முகத்தில் க்ரூட் ஆயில் வழியுது என்றும், ஆண்டவரே உங்க சிரிப்பில் ஏதோ உள்குத்து இருக்கிறமாதிரி தெரியுதே! என ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகளை வரிசையாக போட்டு வெளுத்து வாங்கி உள்ளார் இந்த நெட்டிசன்.

ஆரி பூரியாகாம இருந்தா சரி

"அவன்ட்ட கோத்துவிட்றாதீங்க கமல் Sir! அவனே காண்டுல இருக்கான்! #Aari ய நிஜமாவே பூரியாக்கி பிச்சு தின்னுடுவான்! Aari Mind voice: உங்களலாம் நம்பி Nomination பண்ணது ஒரு குத்தமாடா" என ஆரிக்கும் பாலாவுக்கும் வேற லெவல் சண்டை இருக்கும் என்று ஏகப்பட்டபேர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அல்வா தான்.

டம்மி பீஸ்

நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கழித்தவர்கள்.. நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டான் என கமல் புரமோவில் பேசுவதை பார்த்த நெட்டிசன்கள், புரிஞ்சிக்கோ மச்சான், வார வாரம் கமல் சார் கிட்ட செருப்படி வாங்க புரமோல வரதெல்லாம் பெருமை இல்லடா என பங்கம் பண்ணி டம்மி பீஸ் பாலா என திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X