For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  'ஜெ' மாதிரி இல்ல.. டிடி மாதிரில தெரியுது.. வைரலாகும் தலைவி ஸ்டில்ஸ்.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

  |

  சென்னை: இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் தலைவி படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

  கொரோனா காலக்கட்டத்தில் அடுத்த ஷெட்யூலை வெற்றிகரமாக முடித்து விட்டோம் என கங்கனா ட்வீட் போட்டு அந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

  #Thalaivi ஹாஷ்டேக் டிரெண்டாகி வரும் நிலையில், ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.

  ஐதராபாத் ஏர்போர்ட்டில்

  ஐதராபாத் ஏர்போர்ட்டில்

  கடந்த 10 நாட்களாக அடுத்த கட்ட தலைவி பட படப்பிடிப்பை முடித்து விட்டு, ஐதராபாத் விமான நிலையத்துக்கு சென்ற நடிகை கங்கனா ரனாவத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் கசிந்து வைரலாகின. மாஸ்க் அணிந்தபடி, நீல நிற ஜீன்ஸ் மற்றும் வெள்ளை குர்தா அணிந்து செம மாஸாக நடந்து செல்லும் வீடியோக்களும் கசிந்துள்ளன.

  ஹாஷ்டேக் டிரெண்டிங்

  ஹாஷ்டேக் டிரெண்டிங்

  மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். பாலிவுட் பிரபலங்களை வச்சு செய்த கங்கனாவின் இந்த லுக்கை பார்த்த பலரும் அவரை பழிக்கு பழி வாங்கும் நோக்கில் ட்ரோல் செய்து வருகின்றனர். அப்படியே ஜெயலலிதா மாதிரியே இருக்கீங்க என்றும் பலர் பாராட்டி வருகின்றனர்.

  அடுத்த ஷெட்யூல்

  அடுத்த ஷெட்யூல்

  சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு, பாலிவுட்டில் புழங்கும் போதைப் பொருள் என ரவுண்டு கட்டி சண்டை போட்டு வந்த கங்கனா ரனாவத், மீண்டும் ஷூட்டிங் பக்கம் திரும்பி இருக்கிறார். தலைவி படத்தின் அடுத்த ஷெட்யூல் சிறப்பா முடிஞ்சிடுச்சு என சில பிரத்யேக காட்சிகளையும் வெளியிட்டுள்ளார்.

  அங்க போய் எஸ்கேப் ஆகுறியா

  அங்க போய் எஸ்கேப் ஆகுறியா

  மணிகர்ணிகா படத்தின் ஷூட்டிங்கிற்காக பொம்மை குதிரை ஓட்டிய மேக்கிங் வீடியோக்கள் வெளியாகி கங்கனா ரனாவத்தை ட்ரோல் செய்த நிலையில், தற்போது அதன் கார்ட்டூனை ஷேர் செய்து, தென்னிந்திய ரசிகர்களே, கங்கனா பாலிவுட்டை கழுவி ஊற்றிவிட்டு அங்கே சம்பாதிக்க வருகிறார், அவரது படங்களை புறக்கணியுங்கள் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

  மென்ட்டல் டே

  மென்ட்டல் டே

  கங்கனா ரனாவத் நடித்த படத்தின் செம காமெடியான ஸ்டில்லை போட்டு, World Mental Day என பங்கமாக கலாய்த்து வருகின்றனர் பாலிவுட் ரசிகர்கள். மேலும், என் லேப்டாப்பில் உள்ள கங்கனாவோட படத்தை எல்லாம் டெலிட் பண்ணிட்டேன், ஒட்டுமொத்த பாலிவுட்டையே காலி செய்து விட்டு, பிழைக்கிறதெல்லாம் ஒரு பிழைப்பா என்றும் திட்டி வருகின்றனர்.

  ஏ.எல் விஜய்யுடன்

  ஏ.எல் விஜய்யுடன்

  தலைவி படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குநர் ஏ.எல் விஜய் மாஸ்க் அணிந்து கொண்டு, கங்கனா ரனாவத்துக்கு சீன் எக்ஸ்ப்ளைன் பண்ணுகிற புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. கண்ணாடி அணிந்து கொண்டு ஓப்பன் ஹேர் விட்டிருக்கும் கங்கனாவை பார்த்தால், ஜெ., மாதிரியே தெரியலயே என்றும் ட்ரோல் செய்துள்ளனர்.

  டிடி மாதிரி

  டிடி மாதிரி

  கங்கனா ரனாவத் சேலை கட்டி சிரித்தபடி இருக்கும் கருப்பு வெள்ளை போட்டோவை பார்த்த சில ரசிகர்கள், இதை பார்த்தா ஜெயலலிதா மாதிரி தெரியல, விஜய் டிவி டிடி மாதிரில தெரியுது என செம பங்கம் செய்து கலாய்த்துள்ளனர். அதிலும், அந்த பொம்மை உருண்ட போட்டோவை பார்த்து வேற லெவலில் கிண்டல் செய்து வருகின்றனர்.

  English summary
  Netizens trolled Kangana Ranaut Thalaivi new stills they compared Kangana Jayalalitha role with DD Neelakandan and tweeted so many trolls in #Thalaivi.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X