சார்பட்டா பரம்பரை படத்தை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்.. பங்கமாக கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்!
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகி உள்ள சார்பட்டா பரம்பரை படத்தை பாராட்டிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை நெட்டிசன்கள் கமெண்ட்டில் கழுவி ஊற்றி வருகின்றனர்.
முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படம் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியானது.
அந்த படம் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவிய நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஆர்யா நடிப்பு அபாரம்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை சிறந்த பாக்சிங் படமாக வெளியாகி உள்ளது என்றும், குறிப்பாக நடிகர் ஆர்யாவின் நடிப்பு அபாரம் என்று பாராட்டி உள்ளார். மேலும், கலையரசன், முத்துக்குமார், பசுபதி மற்றும் ஷபீர் நடிப்பு சிறப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரில்லியன்ட் விசுவல்ஸ்
இயக்குநர் பா. ரஞ்சித் மக்களை இந்த படத்தின் மூலம் டைம் டிராவல் செய்ய வைத்து விட்டார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் விசுவல்ஸ் பிரில்லியன்ட்டாக இருந்ததாகவும் அதற்காக ஒளிப்பதிவாளர் முரளியையும் பாராட்டி உள்ளார். மேலும், சந்தோஷ் நாராயணனின் இசை அட்டகாசம் என்றும் கூறியுள்ளார்.

ரசிகர்கள் கலாய்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சார்பட்டா பரம்பரை படத்தை பாராட்டி ட்வீட் போட்ட நிலையில், அதற்கு கீழ் ஏகப்பட்ட நெட்டிசன்கள் அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஜகமே தந்திரம் படம் சொதப்பியதை குறிப்பிட்டே ரசிகர்கள் இப்படி கலாய்த்து வருகின்றனர்.

அல்பசினோ, ராபர்ட் டி நிரோ
ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படம் நல்லா இருக்கு என பாராட்டிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்டுக்கு கீழே, "ஆனா என்ன ப்ரோ.. அல்பசினோ மற்றும் ராபர்ட் டி நிரோவை காஸ்ட் பண்ணல சார்பட்டா படத்துல என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

நீயும் தான்
நீயும் தான் எடுத்து வச்சியே ஜகமே தந்திரம்னு ஒரு மொக்கை படத்தை என இந்த நெட்டிசன் நேரடியாகவே கார்த்திக் சுப்புராஜை கழுவி ஊற்றி உள்ளார். மேலும், சில ரசிகர்கள் ஜகமே தந்திரம் 2 எப்போ வருது சார் என வேற லெவலில் வச்சு செய்து வருகின்றனர்.

சியான் 60 அப்டேட்
தனுஷ் ரசிகர்கள் ஒரு பக்கம் கழுவி ஊற்றி வரும் நிலையில், விக்ரம் ரசிகர்கள் மறுபுறம் சியான் 60 படத்தின் அப்டேட்டை கொடுங்க கார்த்திக் சுப்புராஜ் அண்ணா எனக் கேட்டு வருகின்றனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடித்து வரும் இன்னொரு கேங்ஸ்டர் படம் உருவாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











