ஒரே லாஸ்லியா நினைப்பு தான் போல.. லவ் ஃபெயிலியர் பாட்டை என்னம்மா ஃபீல் பண்றாரு கவின்!

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் காத்து வாக்குல ரெண்டு காதல் பாடலுக்கு ஃபீல் பண்ணி எழுதிய வரிகளை பிக் பாஸ் கவினும் ஃபீல் பண்ணி ட்வீட் போட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பலவித கேள்விகளை எழுப்பி உள்ளது.

பிக் பாஸ் வீட்டில் கவினும் லாஸ்லியாவும் காதலித்து வந்த நிலையில், லாஸ்லியாவை நினைத்து தான் இப்படி கவின் ஃபீல் பண்ணுகிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கவினின் இந்த ட்வீட்டுக்கு விக்னேஷ் சிவனும், அனிருத்தும் லைக் செய்துள்ளது கூடுதல் சிறப்பு.

ரெண்டு காதல் ஃபீலிங்

ரெண்டு காதல் ஃபீலிங்

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் உருவான ரெண்டு காதல் பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இளைஞர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இணைந்துள்ளது.

கவின் ஃபீலிங்

கவின் ஃபீலிங்

தற்போது அந்த பாடலில் இருந்து "அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல்.. எங்கோ தெரிவது போல் மறைவது காதல்.." என்கிற வரிகளை தனது ட்வீட்டில் போட்டு விக்னேஷ் சிவனை டேக் செய்து ஜீனியஸ் சார் நீங்க என்றும், அனிருத்தை டேக் செய்து இதுக்கு ரொம்ப நன்றி தல என்றும் பாராட்டியுள்ளார்.

லைக் பண்ணிட்டாங்க

லைக் பண்ணிட்டாங்க

பிக் பாஸ் பிரபலமும் ஹீரோவுமான கவினின் இந்த ட்வீட்டை பார்த்த விக்னேஷ் சிவன் மற்றும் அனிருத் உடனடியாக லைக் செய்துள்ளனர். இதனை கவினின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அண்ணே, நாங்களும் உங்களை போலவே இந்த பாட்டுக்கு அடிக்ட் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

லாஸ்லியாவை நினைத்தா

லாஸ்லியாவை நினைத்தா

பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவுக்கும் கவினுக்கும் சூப்பரான கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆனது. லாஸ்லியாவின் அப்பா வீட்டுக்குள் வந்து வெடி போட்டு சென்ற நிலையில், இருவரும் தனித் தனியாக பிரிந்து விட்டனர். இந்நிலையில், தற்போது நடிகையாக வலம் வரும் லாஸ்லியா உடனான லவ் ஃபெயிலியரை நினைத்து ஃபீல் பண்றீங்களா புரோ என ஏகப்பட்ட நெட்டிசன்கள் கமெண்ட் செய்து கவினிடம் கேட்டு வருகின்றனர்.

அப்டேட் கொடுங்க

அப்டேட் கொடுங்க

கவின் தனது காதலை நினைத்து அப்படி ஃபீல் பண்ணிட்டு இருக்கும் போது சில ரசிகர்கள், அண்ணா.. லிஃப்ட் படத்தின் அப்டேட் கொடுங்க அண்ணா.. படம் எப்போ ரிலீசாகும் என்று மற்றொரு புறம் கவினை நச்சரிக்க தொடங்கி விட்டனர். சில அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டையும் கவினிடம் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X