உங்களுக்கு கை இல்லை.. வயசானவரை போய் அப்படி பண்ண வைக்கிறீங்க.. பிரபல நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: மஞ்சள் நிற பிகினி புகைப்படத்தை வெளியிட்டு கடந்த ஞாயிற்றுக் கிழமை சர்வதேச அளவில் டிரெண்டான கியாரா அத்வானியை நெட்டிசன்கள் தற்போது திட்டித் தீர்த்து வருகின்றனர்.

ரூமர் காதலர் சித்தார்த் மல்கோத்ராவின் வீட்டுக்கு சென்ற நடிகை கியாரா அத்வானியின் கார் கதவை வயதானவர் ஒருவர் திறந்து விட்டு சல்யூட் அடிக்கும் வீடியோ வைரலானது தான் இந்த அர்ச்சனைக்கு காரணம்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடிக்க உள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சன்டே ஸ்பெஷல்

சன்டே ஸ்பெஷல்

கடந்த ஞாயிற்றுக் கிழமை மஞ்சள் நிற பிகினி அணிந்து படு ஹாட்டாக போஸ் கொடுத்து சர்வதேச அளவில் வைரலானார் நடிகை கியாரா அத்வானி. எம்.எஸ். தோனியின் பயோபிக் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர் தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் படு போல்டாக நடித்து அசத்தி வருகிறார்.

ரூமர் காதலர்

ரூமர் காதலர்

ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர், ஏக் வில்லன், ஷேர்ஷா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவுடன் நடிகை கியாரா அத்வானி காதல் கொண்டிருப்பதாக பாலிவுட்டில் ஏகப்பட்ட வதந்திகள் உலா வருகின்றன. இருவரும் இணைந்து வெளியே சுற்றும் நெருக்கமான புகைப்படங்களும் இணையத்தில் இடம்பெற்றுள்ளன.

காதலர் வீட்டுக்கு

காதலர் வீட்டுக்கு

இந்நிலையில், ரூமர் காதலர் சித்தார்த் மல்கோத்ரா வீட்டுக்கு நடிகை கியாரா அத்வானி காரில் இருந்து இறங்கி செல்லும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. காதலர் வீட்டுக்கு செல்வதை விட, வேறு ஒரு விஷயத்துக்காக நடிகை கியாரா அத்வானியை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

சல்யூட் அடிக்கும் வயதானவர்

நடிகை கியாரா அத்வானியின் கார் கதவை வயதான ஒரு ஊழியர் திறந்து விடுவதும், சல்யூட் அடிப்பதுமாக உள்ள வீடியோ ஒன்று வைரலாகி வரும் நிலையில், அந்த சல்யூட்டையும் ஏற்றுக் கொண்டு விருட்டென வீட்டிற்குள் செல்லும் கியாரா அத்வானியை பார்த்து பாலிவுட் ரசிகர்கள் கண்டபடி விளாசி வருகின்றனர்.

உங்களுக்கு கை இல்லையா

உங்களுக்கு கை இல்லையா

சாதாரண கார் கதவை கூட திறந்து கொள்ள முடியாதா? உங்களுக்கு கை இல்லையா? அமீரக நாட்டு இளவரசி போல இப்படியொரு பந்தா எதற்கு என ஏகப்பட்ட நெட்டிசன்கள் வரிசைக் கட்டி கியாரா அத்வானியை வெளுத்து வருகின்றனர். வயதானவர்களை இப்படி வேலை வாங்குகிறீர்களே கொஞ்சமாவது வயதுக்கு மதிப்பு கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள் என ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஷங்கர் நாயகி

ஷங்கர் நாயகி

இயக்குநர் ஷங்கர் அடுத்ததாக ராம்சரணை வைத்து இயக்கவுள்ள பிரம்மாண்ட படத்திலும், ரன்வீர் சிங்கை வைத்து இயக்கவுள்ள அந்நியன் இந்தி ரீமேக் படத்திலும் நடிகை கியாரா அத்வானி தான் நாயகி என்கிற உறுதியான தகவலும் சமீபத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X