எங்களுக்கு புடிச்ச எமோஜி குப்பைத் தொட்டி தான்.. கிம் கர்தாஷியனையே பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: எங்களுக்கு புடிச்ச எமோஜி குப்பைத் தொட்டி தான் என சர்வதேச சூப்பர் மாடல் அழகியான கிம் கர்தாஷியனை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Recommended Video

தாங்க்ஸ்கிவ்விங் கொண்டாடிய த்ரிஷா, பிரியங்கா மற்றும் பல திரை பிரபலங்கள்- வீடியோ

கிம் கர்தாஷியனின் கணவர் அடுத்து வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து பரபரப்பை கிளப்பினார்.

கன்யே வெஸ்ட் போட்டியிடப் போவதாக அறிவிப்பு வெளியான நிலையில், கிம் கர்தாஷியனுக்கும் கன்யே வெஸ்டுக்கும் இடையே பிரச்சனை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சூப்பர் மாடல்

சர்வதேச சூப்பர் மாடல்

சர்வதேச சூப்பர் மாடலாக கிம் கர்தாஷியன் கலக்கி வருகிறார். Keeping up with Kardashians எனும் ரியாலிட்டி ஷோ மூலம் அமெரிக்க ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இன்ஸ்டாகிராமில், தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு, சுமார் 177 மில்லியன் ரசிகர்களை தனது ஃபாலோயர்களாக மாற்றி உள்ளார்.

பெண் தொழிலதிபர்

பெண் தொழிலதிபர்

கடந்த 2017ம் ஆண்டு கிம் கர்தாஷியன் வெஸ்ட் பியூட்டி எனும் அழகு சாதன நிறுவனத்தை தொடங்கி, லிப்ஸ்டிக், லிப் கிளாஸ், ஐ லைனர் என பெண்கள் தலை முதல், கால் வரை பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வருகிறார். கிளாமர் கேர்ளாக மட்டும் இல்லாமல் கோடீஸ்வர தொழிலதிபராக கிம் இருக்கிறார்.

துணையாக இருப்பேன்

துணையாக இருப்பேன்

அண்மையில் கிம் கர்தாஷியனின் கணவர் கன்யே வெஸ்ட் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்த நிலையில், கணவன் மனைவிக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இருவரும் விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது கணவரின் கனவு நிறைவேற துணையாக இருப்பேன் என கிம் கர்தாஷியன் முடிவு செய்துள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

பிடித்த எமோஜி

பிடித்த எமோஜி

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் மாடல் அழகி கிம் கர்தாஷியன், தனக்கு பிடித்த எமோஜி மேஜிக் ஸ்பார்கிள் என்றும், உங்களுக்கு பிடித்த எமோஜி என்ன என்று சொல்லுங்கள் என செக்ஸியான கவுனை அணிந்து கொண்டு தனது ரசிகர்கள் மத்தியில் எமோஜி குறித்த கேள்வியை எழுப்பி உள்ளார்.

மக்கள் செத்துகிட்டு இருக்காங்க

மக்கள் செத்துகிட்டு இருக்காங்க

அமெரிக்காவில் கொரோனா காரணமாக லட்சக் கணக்கான மக்கள் செத்துகிட்டு இருக்காங்க, இந்த உலகம் அழிஞ்சுகிட்டு வருது, இனவெறி பெருக்கெடுத்து ஓடுகிறது, அதிபர் டிரம்பை மீண்டும் ஜெயிக்க வைக்க உங்க புருஷன் உழைத்துக் கொண்டு இருக்கிறார். இந்நிலையில், உங்களுக்கு எமோஜி விளையாட்டு கேட்குதா என நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

குப்பைத் தொட்டி

குப்பைத் தொட்டி

கிம் கர்தாஷியனும் அவரது கணவர் கன்யே வெஸ்டும் அமெரிக்க மக்களுக்கு எதிராக சதி திட்டம் செய்து வருவதை மக்கள் உணர்ந்து கொண்டதாகவும், இனிமேலும் எங்களை ஏமாற்ற முடியாது என்றும், உங்கள் ஷோக்களையும் பார்க்க மாட்டோம், ஷூக்களையும் வாங்க மாட்டோம். மேலும், எந்தவொரு அழகு சாதன பொருட்களையும் வாங்காமல் ஒட்டுமொத்தமாக உங்களை புறக்கணிக்க போகிறோம். எனக்கு பிடித்த எமோஜி குப்பைத் தொட்டித் தான் என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X