For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இதுக்கு லக்ஷ்மி மேனன் பிக் பாஸ் வீட்ல டாய்லெட் கழுவ போயிருக்கலாமே.. வைரலாகும் போட்டோ.. உண்மை என்ன?

  |

  சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் வரவில்லை என்பதை கண்டவங்க வீட்டு டாய்லெட்லாம் என்னால கழுவ முடியாது என சொல்லி சர்ச்சையில் சிக்கினார் லக்‌ஷ்மி மேனன்.

  இப்போ சமூக வலைதளங்களில் நடிகர் கருணாஸ் உடன் அவர் ஜோடியாக இருக்கும் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

  மேலும், திண்டுக்கல் சாரதி 2 படத்தில் லக்‌ஷ்மி மேனன் நடிக்கிறார் என்கிற தகவலும் தீயாக பரவி வருகிறது.

  பூப்போட்ட பிகினியில்.. கடலை சூடாக்கும் கவர்ச்சி நடிகை.. கிறங்கி தவிக்கும் நெட்டிசன்ஸ்! பூப்போட்ட பிகினியில்.. கடலை சூடாக்கும் கவர்ச்சி நடிகை.. கிறங்கி தவிக்கும் நெட்டிசன்ஸ்!

  கும்கி கொடுத்த ஹிட்

  கும்கி கொடுத்த ஹிட்

  ரகுவின்ட்டே சொந்தம் ரசியா மற்றும் ஐடியல் கப்புள் என இரு மலையாள படங்களில் நடித்து வந்த லக்‌ஷ்மி மேனன், சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே ஆண்டு, வெளியான கும்கி படமும் லக்‌ஷ்மி மேனனுக்கு மிகப்பெரிய வெற்றியை தமிழ் சினிமாவில் கொடுக்க, தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடித்து கலக்கினார்.

  விஷாலுடன் இணைந்து

  விஷாலுடன் இணைந்து

  சசிகுமாருடன் இணைந்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி என இரு படங்களில் நடித்து வந்த லக்‌ஷ்மி மேனன், அடுத்ததாக விஷாலுடன் இணைந்து நடித்த பாண்டியநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதன் பின்னர் இருவரும் ஜோடி போட்டு நடித்த நான் சிகப்பு மனிதன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

  மார்க்கெட் சரிவு

  மார்க்கெட் சரிவு

  சசிகுமார் நாயகி என குத்தப்பட்ட முத்திரையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற முயன்ற லக்‌ஷ்மி மேனன், தொடர்ந்து இளம் ஹீரோக்களுடன் படங்கள் பண்ண ஆரம்பித்தார். நடிகர் விஷாலை தொடர்ந்து, விமல், கார்த்தி, ஜெயம் ரவி, விஜய்சேதுபதி என ஜோடி போட்டு இவர் நடித்த படங்கள் கலவையான விமர்சனங்களுடன் சுமாராக ஓடின. சில படங்கள் ஃப்ளாப் ஆனதும், இவரது மார்க்கெட் சரியத் தொடங்கியது.

  டாய்லெட் கழுவ முடியாது

  டாய்லெட் கழுவ முடியாது

  பின்னர், லக்‌ஷ்மி மேனன் இந்த பிக் பாஸ் தமிழ் 4ல் போட்டியாளராக கலந்து கொள்கிறார் என்கிற தகவல் தீயாய் பரவின. அதனை மறுத்த லக்‌ஷ்மி மேனன், கண்டவங்க வீட்டு டாய்லெட், பாத்திரம் எல்லாம் என்னால கழுவ முடியாது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நான் போகல என ரொம்ப ஸ்ட்ராங்கான ஸ்டேட்மென்ட் கொடுத்து ரசிகர்களை அதிரச் செய்தார்.

  திண்டுக்கல் சாரதி 2

  திண்டுக்கல் சாரதி 2

  லக்‌ஷ்மி மேனனை எப்படி பழிவாங்கலாம் என யோசித்துக் கொண்டிருந்த சில நெட்டிசன்கள், சட்டென, திண்டுக்கல் சாரதி 2 படத்தில் லக்‌ஷ்மி மேனன் கருணாசுக்கு ஜோடியா நடிக்கிறாங்க என்ற ஒரு தகவலை போட்டோ ஒன்றுடன் சேர்த்து கொளுத்தி போட்டுட்டாங்க, அது இப்போ கொரோனா வைரஸை விட வேகமாக பரவி வருகிறது.

  இதுக்கு டாய்லெட் கழுவ போயிருக்கலாமே

  இதுக்கு டாய்லெட் கழுவ போயிருக்கலாமே

  நடிகர் கருணாஸ் உடன் திண்டுக்கல் சாரதி 2ம் பாகத்தில் நடிக்கும் செய்தியை மேலே போட்டு, கீழே படையப்பாவில் சிவாஜி பேசும் காட்சியை போட்டு, இதுக்கு இவ பிக்பாஸ் வீட்ல டாய்லெட் கழுவவே போயிருக்கலாமே என பங்கமாக கலாய்த்த மீம் ஒன்றும் வைரலாகி வருகிறது.

  உண்மை என்ன

  உண்மை என்ன

  இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்று பார்த்தால், இது முற்றிலும் லக்‌ஷ்மி மேனனை டார்கெட் செய்யப்பட்டே செய்யப்பட்ட செயல் என்றே தெரிகிறது. கருணாஸ் உடன் கொம்பன் படத்தில் நடித்த போது எடுத்த புகைப்படத்தை இப்போ ஷேர் செய்து, அதை வைத்து மீம்களையும் போட்டு வருகின்றனர். அப்படியே லக்‌ஷ்மி மேனன் கருணாஸ் உடன் ஜோடி போட்டு நடித்தாலும், அது கேவலமான செயல் இல்லையே!

  கம்பேக் கொடுப்பார்

  கம்பேக் கொடுப்பார்

  மேலும், லக்‌ஷ்மி மேனன் தனது உடல் எடையை குறைத்துக் கொண்டு சிக்கென ஸ்லிம் ஆகி உள்ளார். நடனத்திலும் தனது திறமைகளை காட்டி வருகிறார். விரைவில், ஒரு நல்ல படத்துடன் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என்றே தெரிகிறது. வெயிட் பண்ணி பார்ப்போம்.

  English summary
  Lakshmi Menon and Karunas in Komban movie shooting spot still goes viral with a fake news. Some meme creators also trolled Lakshmi Menon for Bigg Boss Tamil 4 controversy.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X