தமிழ் சினிமாவை விமர்சித்த லட்சுமி ராமகிருஷ்ணன்... வச்சு செஞ்ச நெட்டிசன்ஸ்!

By Vignesh Selvaraj

Recommended Video

பாலிவுட்டை புகழ்ந்து நெட்டிசன்களிடம் வசமாக சிக்கி கொண்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன்- வீடியோ

சென்னை : நடிகையும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன் எப்போதும் தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை தைரியமாக சொல்லக்கூடியவர். பல விஷயங்களில் அப்படி பேசி ரசிகர்களின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளார்.

அதிலும் அவர் பிரபல தொலைக்காட்சியில் நடத்தும் ஒரு நிகழ்ச்சியால் நிறைய பிரச்சனைகளுக்கும், கிண்டல்களுக்கும் ஆளாகியது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்நிலையில், தமிழ் சினிமாவை விமர்சித்து இன்னொரு சிக்கலில் மாட்டியிருக்கிறார். அவரை ட்விட்டரில் நெட்டிசன்கல் கலாய்த்து வருகின்றனர்.

பாலிவுட்டில் நிஜ ஹீரோ

லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய ட்விட்டரில், தமிழ்நாட்டில் மற்றவர்களை கிண்டல் செய்வது, ஒரு நல்ல விஷயத்தை கலாய்த்து தங்களது படத்தில் காட்டுவதுமாக இருக்கின்றனர். ஆனால் பாலிவுட் சினிமாவில் நிஜ ஹீரோக்களை வைத்து படம் எடுக்கிறார்கள். நிஜ Padman அவர்களை பார்த்தது சந்தோஷம் என ட்வீட் செய்திருந்தார்.

தமிழிலும் வருதே

இதனை பார்த்த ரசிகர்கள் பாலிவுட் மிகவும் மோசமானது. அவர்களின் ஒரு சில படங்களை பார்த்துவிட்டு இப்படிக் கூறக்கூடாது. இங்கேயும் அறம், அருவி போன்ற தரமான படங்கள் நிறைய இருக்கிறது என பதில் கூறிவருகின்றனர்.

அருவி பார்த்தீங்களா

பாலிவுட்டில் வரும் 'பேடுமேன்' படத்தை பாராட்டும் நீங்க, 'அருவி' படம் உருவாகும்போது எங்க போயிருந்தீங்க' என ஒருவர் கமென்ட் செய்துள்ளார்.

குடும்பத்தோட பார்க்க முடியுமா

உஙகளோட தைரியமான கருத்துகள் எனக்கும் பிடிக்கும். ஆனா, இந்த முறை இல்லை. நீங்க 'அறம்', 'தீரன்', 'அருவி' படத்தையெல்லாம் பார்த்திருக்கீங்களா? பாலிவுட்டில் வரும் எல்லா படங்களையும் உங்க குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்க முடியுமா? ஒரு சில படங்களை மட்டுமே வச்சு தமிழ் சினிமாவை குறைச்சு மதிப்பிடாதீங்க.

நீங்க பாலிவுட்டுக்கே போகலாமே

தமிழ் சினிமாவை விட பாலிவுட் சினிமாதான் சிறந்ததுனு நினைச்சீங்கனா பாலிவிட்டுக்கே நீங்க போயிடலாமே... நீங்க இங்க ஏன் இருக்கீங்க என்று ஒருவர் கேட்டுள்ளார்.

சொல்வதெல்லாம் உண்மை

பாலிவுட்டில் 'சத்யமேவ ஜெயதே' எடுக்கும்போது நீங்க இங்க 'சொல்வதெல்லாம் உண்மை' நடத்துறீங்களே ஏன்? என ஒருவர் செமையாக கலாய்த்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X