லதா ரஜினிகாந்த் சொன்ன அந்த ஒரேயொரு வார்த்தை.. சும்மா வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. ஹாஷ்டேக் வேற!
சென்னை: பெங்களூர் நீதிமன்றத்தில் நேற்று லதா ரஜினிகாந்த் கோச்சடையான் வழக்கு தொடர்பாக ஆஜரான நிலையில், முக்காடு போட்டு வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய லதா ரஜினிகாந்த் தன்னை அந்த வார்த்தை ரொம்பவே தைத்து விட்டது என பேசி அதற்கு விளக்கமும் கொடுத்திருந்தார். எந்த வார்த்தை ஹர்ட் பண்ணுகிறதோ என தெரிந்து விட்டால் போதும் ஹேட்டர்கள் அதை வைத்து செய்து விடுவார்கள். தற்போது லதா ரஜினிகாந்துக்கு எதிராக #முக்காடுலதா ஹாஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் வாய்க்கா தகராறு ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படியொரு மேட்டர் கிடைத்தால் சும்மா இருப்பார்களா? விஜய் ரசிகர்களும் களத்தில் குதித்து லியோ வெற்றி விழாவில் விஜய் சொல்லியும் கேட்காமல் சோஷியல் மீடியாவில் வன்மத்தை கக்கி வருகின்றனர்.

நான் முக்காடு போடவில்லை: பெங்களூர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான லதா ரஜினிகாந்த் நீதிமன்றத்துக்கு வரும் போது முகத்தை மறைக்க வேண்டும் என முக்காடு போட்டுக் கொண்டு சென்றார் என விமர்சிக்கப்பட்ட நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய லதா ரஜினிகாந்த் நான் முக்காடு போடவில்லை என்றும் வெயிலுக்கு முகத்தை மறைத்துக் கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.
முக்காடு லதா ஹாஷ்டேக்: இந்நிலையில், #முக்காடுலதா ஹாஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து மிகவும் மோசமான வீடியோ ட்ரோல்களை போட்டு தங்கள் வன்மத்தை கொட்டித் தீர்த்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தையும் அவரது மனைவி லதா ரஜினிகாந்தையும் எந்தளவுக்கு அசிங்கப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு படுத்தி வருகின்றனர்.

ஜெயிலர் வந்துட்டாரா: "கார் வர சத்தம் கேக்குது ஜெயிலர் வந்துட்டார் போல... இல்ல அவர் பொண்டாட்டி தான் பெயில் வாங்க முக்காடு போட்டு வந்துருக்கு..." என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
என்னவொரு குடும்பம்: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுகிறார். முக்காடு போட்டுக் கொண்டு லதா ரஜினிகாந்த் நீதிமன்றம் வருகிறார். என்னவொரு குடும்பம் என்று படுமோசமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

டோட்டல் டேமேஜ்: #முக்காடுலதா ஒரே ஒரு ஹாஷ்டேக் தான் போட்டாங்க, டோட்டல் ஃபேமிலி டேமேஜ் என நெட்டிசன்கள் அதிகளவில் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











