புதுசா ஒன்னும் இல்லையே.. ஏற்கனவே சொன்னதுதானே.. லோகேஷ் கனகராஜை கலாய்க்கும் ரசிகர்கள் !

சென்னை : லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மார்ச் 14ந் தேதி காலை 7மணிக்கு விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளார்.

இந்த போஸ்டரை பார்த்து கடுப்பான ரசிகர்கள் இதைத்தான் ஏற்கனவே சொல்லியாச்சே திரும்பவும் அதே அப்டேட்டா என கலாய்த்துள்ளர்.

அனிரூத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான, ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

விக்ரம்

விக்ரம்

பிரபல நடிகரும் அரசியல் தலைவருமான கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். கமலுடன் இணைந்து இப்படத்தில் ஷிவானி, மகேஷ்வரி, மைனா நந்தினி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாஸ் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் மட்டும் 7 வில்லன் கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர். விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் மெயின் வில்லனாக நடித்துள்ளார்கள். மேலும், சம்பத்ராம், செம்பன் வினோத், டெல்லி கணேஷின் மகன் மகாதேவன், மைம் புகழ் கோகுல்நாத், மெர்சல் பட வில்லன் ஹாரிஸ் பெராடி என துணை வில்லன்களாக நடித்திருக்கிறார்கள்

சூடுபிடித்த வியாபாரம்

சூடுபிடித்த வியாபாரம்

விக்ரம் படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இதே வேளையில் வியாபாரமும் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதோடு விக்ரம் படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விக்ரம் அப்டேட்

விக்ரம் அப்டேட்

விக்ரம் திரைப்படத்தில் ரிலீஸ் தேதி மார்ச் 14ந் தேதி அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை படம் குறித்து அப்டேட் வரும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மார்ச் 14ந் தேதி காலை 7 மணிக்கு விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும் என்ற தகவலுடன் ஒரு போஸ்டரை வெயிட்டுள்ளார்.

புதுசா ஒன்னும் இல்லையே

புதுசா ஒன்னும் இல்லையே

முக்கியமான தகவல் ஏதாவது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஏற்கனவே சொன்னதுதானே,புதுசா இந்த அப்டேட்டில் என்ன இருக்கு என்று ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

போஸ்டர்ல செம பையர்

போஸ்டர்ல செம பையர்

போஸ்டர் செம பையரா இருக்கு ஆனால், புது அப்டேட் ஒன்னும் இல்லையே புலிவருது.. புலிவருதுனு இதையே எத்தனை நாளைக்கு சொல்லுவீங்க ப்ரோ போங்க புதுசா எதாவது சொல்லுங்க என் மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு என்று மீம்ஸ் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X