365 நாளும் என் கூடவே இருப்பவர்.. நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை போட்ட மாளவிகா மோகனன்!

சென்னை: மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் தனது நண்பருடன் பதிவிட்டுள்ள செல்ஃபி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது தனுஷ் உடன் டி43 படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பில் நடிக்க காத்துக் கொண்டிருக்கிறார்.

நண்பருடன் செல்ஃபி

நண்பருடன் செல்ஃபி

நடிகை மாளவிகா தன்னுடைய நண்பரை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார். மாஸ்டர் ஹீரோயின் திடீரென படு நெருக்கமாக ஃபிரண்ட் உடன் இருக்கும் போட்டோவை போட்டு உருகி கேப்ஷனையும் போட்டதை பார்த்த ரசிகர்கள் அந்த நண்பரின் இன்ஸ்டாகிராம் ஐடியின் பெயரை பார்த்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஐட்டம் பாம்

ஐட்டம் பாம்

அபினவ் எனும் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஐடியில் ஐட்டம் பாம் என குறிப்பிட்டு இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் இவர் தான் உங்கள் பாய் ஃபிரண்டா என அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன் கலாய்த்து வருகின்றனர். ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகளும் மாளவிகா மோகனனின் இன்ஸ்டா போஸ்ட்டுக்கு கீழே குவிந்து வருகின்றன.

லெஸ்பியன் காதலா

லெஸ்பியன் காதலா

என்னடா இது ஒரு பொண்ணு இன்னொரு பொண்ண லவ் பண்ணுது என ரொம்பவே பங்கமாக மாளவிகா மோகனனை நெட்டிசன்கள் ஓட்டி வருகின்றனர். மேலும், சிலர் அது உங்க சிஸ்டரா என்றும் லெஸ்பியன் லவ்வா என்றும் ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகளை குவித்துள்ளனர்.

365 நாளும்

365 நாளும்

நடிகை மாளவிகா மோகனின் ஆண் நண்பரான அபினவ் எனும் ஐட்டம் பாமின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படியொரு வாழ்த்து போஸ்ட்டை மாளவிகா பதிவிட்டுள்ளார். மேலும், அதில் தன் வாழ்க்கையை மாற்றியவரும் இவர் தான் என்றும், 24/7 மற்றும் 365 நாள் என எப்போதும் என்கூடவே இருப்பவர் என்றும் உருகி உள்ளார்.

நீண்ட கால நண்பர்

நீண்ட கால நண்பர்

தயாரிப்பாளரான அபினவ் நடிகை மாளவிகா மோகனின் மிக நீண்ட கால நண்பர். மாளவிகா மோகனனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை விட ஐட்டம் பாம் இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதுமே மாளவிகா மோகனன் தான் நிறைந்துள்ளார். இருவரும் எப்போதுமே ஒன்றாகவே பல இடங்களுக்கு பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X