பிரஷ் பண்றது, பபுள் கம், லெக் பீஸ்ன்னு.. மாஸ்டர் மாளவிகாவை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: மாஸ்டர் படத்தில் விஜய்யை பார்த்து மாளவிகா மோகனன் பேசும் அந்த ஒரு காட்சியை வேற லெவலில் மரண பங்கமாக எடிட் செய்து தெறிக்க விட்டு வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

மாஸ்டர் படத்தில் முக்கியமான ரோல் தான் என்றாலும், மாளவிகா மோகனனுக்கு நடிக்க மிகப்பெரிய ஸ்கோப் கொடுக்கப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனாலும், அவருக்கு இடைவேளைக்கு முன்னதாக விஜய்யை திட்டிப் பேசும் காட்சி கொடுக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த காட்சியை வைத்து ஏகப்பட்ட போட்டோ மீம்கள் பறக்கின்றன.

மாஸ்டர் ஹீரோயின்

மாஸ்டர் ஹீரோயின்

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். ஆனால், ஆண்ட்ரியாவை போலவே மாளவிகாவுக்கும் பெரிய அளவில் நடிக்க ஸ்பேஸ் கொடுக்கப்படவில்லை. ஏகப்பட்ட பிரபல நடிகர்களுக்கும் இதே கதி தான்.

பிரஷ் பண்ணுவது

பிரஷ் பண்ணுவது

மாஸ்டர் படத்தின் இடைவேளைக்கு முன்பாக அந்த இரு சிறுவர்களும் இறந்து விட, அதனால் கொதித்தெழும் மாளவிகா மோகனன் விஜய்யை திட்டும் ஒரு வசன காட்சியை போட்டோ எடிட் செய்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்ஸ். இந்த போட்டோவில் மாளவிகா மோகனன் பிரஷ் பண்ணுவது போல எடிட் செய்து அல்டி செய்துள்ளனர்.

லெக் பீஸ்

லெக் பீஸ்

ஃபிரைய்டு சிக்கன் லெக் பீஸை கடித்து தின்பது போல இருக்கும் இந்த போட்டோவை எல்லாம் பார்த்தால், அவரே விழுந்து விழுந்து சிரித்து விடுவார். அந்த அளவுக்கு ஒவ்வொரு எடிட்டையும் தரமான சம்பவமாக செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். கற்பனை கலாய்ப்பதோடு இருந்தால் சரி.

லேஸ் பாக்கெட்

லேஸ் பாக்கெட்

ஒரே ஒரு சீனில் தான் படத்தில் அவருக்கே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீனையும் இப்படி சும்மா வளைச்சு வளைச்சு ஓட்டிட்டு வறீங்களே.. அப்படி என்ன தான் அவர் மீது காண்டு, பார்த்தா பாவமா தெரியலையா என்றே சொல்கிறது சில மீம்களை பார்த்தால், இந்த லேஸ் பாக்கெட்டை பிரித்து தின்னும் மீமெல்லாம் வேற லெவல்.

லஞ்ச் பாக்ஸ்

லஞ்ச் பாக்ஸ்

பள்ளியில் லஞ்ச் பெல் அடித்தால் போதும், ஒவ்வொருத்தரும், காலையில் அம்மா செம சூடாக கட்டிக் கொடுத்த லஞ்ச் பாக்ஸ் அப்படியே டைட் ஆகிப் போய்விடும். சில நேரங்களில் அதை திறப்பதற்குள் லஞ்ச் பெல்லே முடிந்து விடும் போல போராட வேண்டியிருக்கும். அப்படியொரு போராட்டத்தை செய்து லஞ்ச் பாக்ஸை மாளவிகா திறப்பது போல உள்ளது இந்த எடிட்.

முட்டை விடுறாங்க

முட்டை விடுறாங்க

வாயை திறந்து பேசி அவர் செய்யும் ரியாக்‌ஷனை படத்தில் பார்க்கும் போதே சும்மா குடிச்சிட்டு இருந்தவனை திருட்டுத் தனமா கையெழுத்துப் போட்டு கோர்த்து விட்டுட்டு, நீயே திட்டுவது என்ன நியாயம்மா என கிண்டல் செய்த ரசிகர்கள், தற்போது கற்பனை குதிரைகளை பறக்க விட்டு அவரோட வாயில் பபுள் கம்மை போட்டு, அதை முட்டை விடுற அளவுக்கு எடிட் செய்திருப்பது மரண பங்கம் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், ஏகப்பட்ட மீம்கள் சமூக வலைதளத்தில் உலா வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X