திருவிக பூங்கா படத்தில் அர்னால்டா? மஞ்சள் வீரன் இயக்குநரை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: சோஷியல் மீடியாவில் எந்த பக்கம் பார்த்தாலும், டிடிஎஃப் வாசனின் மஞ்சள் வீரன் படம் குறித்த விவாதமாகவே இருக்கிறது. இயக்குநர் செல்அம், வாசனை ஏமாற்றி விட்டதாக பலர் குற்றம்சாட்டி வரும் நிலையில் டிடிஎஃப் வாசனின் தீவிர ரசிகர்கள் இயக்குநர் செல்அம்மை இணையத்தில் ரோஸ்ட் செய்து வருகின்றனர். தற்போது இணையவாசிகளுக்கு ட்ரோல் மெட்டீரியலாக இயக்குநர் செல்அம் மாறி இருக்கிறார்.
பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன், மஞ்சள் வீரன் படத்தில் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக அட்டகாசமான போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு மஞ்சள் வீரன் படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், திடீரென செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர், மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்குவதாக அறிவித்தார். இதற்கான காரணத்தை கேட்ட போதும், வாசன் ஒருநாள் கூட படப்பிடிப்புக்கு வரவில்லை, எப்போதும் எங்காவது சென்றுவிடுவார், இல்லை என்றால் கோர்ட் கேஸ் என்று சென்றுவிடுகிறார். நானும் சொல்லிப்பார்த்தேன் அவர் இனி திருந்த மாட்டார் என்பதால் அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டேன் என்றார்

ஏமாற்றிவிட்டார்: இதையடுத்து, டி.டி.எஃப்.வாசன், இயக்குநர் செல் அம், என்னை படத்தில் இருந்து நீக்கியதே எனக்கு தெரியாது. அவர் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று சொல்லி இருந்தார்.அவர் ஒரு நாள் கூட படப்பிடிப்பை நடத்தவில்லை. மஞ்சள் வீரன் படத்தின் போட்டோஷூட் மட்டுமே நடந்தது. படபூஜை தாஜ் ஓட்டலில் நடந்தது அதற்கு கூட நான் தான் பணம் கொடுத்தேன். இதுகுறித்து பேச நான், அவரை பலமுறை தொடர்பு கொண்டேன். ஆனால், அவர் என் அழைப்பை எடுக்கவில்லை.நான் செலவு செய்த பணத்தில் எனக்கு ஒரு பைசாக்கூட வேண்டாம், ஆனால், எதற்காக என்னை படத்தில் இருந்து நீக்கினார் என்ற காரணத்தை மட்டும் சொன்னால் போதும் என்று பேசி இருந்தார். வாசனின் நண்பர் அஸிசும், இயக்குநர் செல்அம் ரசியான ஏமாத்துக்காரன், வாசன் மட்டும் இல்லை என்றால், இவரை யாருக்கு தெரியும் என்று பேசி இருந்தார்.
திருந்தவேமாட்டார்: இதற்கு பதில் அளிக்கும் வகையில் யூடியூப் சேனலில் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குநர் செல் அம், முதலில் டிடிஎஃப் வாசனுடன் பழகும் போது, அவர் தங்கமாக தெரிந்தார். அதனால், நான் அவரை தங்கம் என்றேன். ஆனால், பழக பழகத்தான் அவர் தங்கம் இல்லை குப்பை என்று தெரிகிறது. வேண்டாத பொருளைத்தான் குப்பையில் போடுவார்கள். அதனால் தான் அவரை நான் குப்பையில் போட்டுவிட்டேன். அவரை படத்தில் இருந்து நீக்கியதற்கான காரணத்தை சொல்வதற்கு கூட தகுதி இல்லாதவன் வாசன் என்பதால் நான் சொல்லவில்லை.
நான் தான் கடன் வாங்கி செலவு செய்து இப்போது வரைக்கும் அதற்காக வட்டி கட்டிக்கொண்டு இருக்கிறேன். எது உண்மை என்று கடவுளுக்கு தெரிந்தால் போதும், பொறுத்து பொறுத்து பார்த்தேன் இனி அவர் திருந்தவே மாட்டார் என்ற முடிவுக்கு வந்ததால் தான், படத்தில் இருந்து அவரை நீக்கினேன் என்றார்.
உப்புமா படமா?: மேலும், நான் வாசனை பார்ப்பதற்கு முன் திருவிக பூங்கா என்ற படத்தை எடுத்துவிட்டேன், அந்த படத்தை உப்புமா படம் என்கிறார்கள். அந்த படத்தில் காதல் தண்டபாணி, ஜான் விஜய் நடித்து இருக்கிறார்கள். தாமரை மேடம், புதுச்சேரி முன்னாள் கவர்னர் தமிழைசை சௌந்தரராஜன் பாடல் எழுதி இருக்கிறார். ஸ்ரீதர் மாஸ்டர் நடன இயக்குநராக இருந்து இருக்கிறார். என்.எஸ்.கே. ரம்யா,கானா பாலா ஆகியோர் பாடல் பாடி இருக்கிறார்கள்.
ட்ரோல் மெட்டீரியல்: இவ்வளவு பேர் இருக்கும் படம் ஒரு உப்புமா படமா? அப்படினா உங்களுக்கு அமெரிக்காவில் இருந்து அர்னால்ட்டை அழைத்து வந்து படம் எடுத்தாலும் அதுவும் உப்புமா படம் என்று தான் சொல்லுவீர்கள் என்றார். இந்த பேட்டியைப் பார்த்து கடுப்பான வாசனின் தீவிர ரசிகர்கள் உன் படத்தோட லட்சணம் என்னனு எல்லாருக்கும் தெரியும் என்றும், அர்னால்டை வச்சு படம் எடுத்தாலும் உன்னமாதிரி இயக்குநர் இருந்தா அது உப்புமா படம் தான் என்றும் இணையத்தில் இயக்குநரை கழுவி ஊற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











