ஓ இதுக்குப் பேரு தான் சீன் பேப்பரா.. லோகேஷ் கனகராஜ் ரியாக்ஷனை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!

சென்னை: மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சீன் பேப்பரை வித்தியாசமாக பார்க்கும் புகைப்படம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

மாநகரம், கைதி படங்களை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார்.

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது உலக நாயகனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார்.

லோ பட்ஜெட்டில்

லோ பட்ஜெட்டில்

மாநகரம் மற்றும் கைதி படங்களை ரொம்ப லோ பட்ஜெட்டில் குறைந்த ஷெட்யூலில் பரபரப்புக்கு பஞ்சமின்றி இயக்கி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் தனக்கு புது அனுபவத்தை கொடுத்ததாக லோகேஷ் கனகராஜ் கூறினார்.

ஊரையே கூட்டி

ஊரையே கூட்டி

தளபதி விஜய் படம் என்றால் சொல்லவா வேண்டும். ஒரே இரவில் நகரும் கைதி திரைப்படத்தை ஹீரோயின் கூட இல்லாமல் எடுத்து முடித்த லோகேஷ் கனகராஜ், விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கெளரி கிஷன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், விஜே ரம்யா, மாஸ்டர் மகேந்திரன், பூவையார் என ஒரு ஊரையே கூட்டி திருவிழாவாக மாஸ்டர் படத்தை எடுத்து முடித்தார்.

சீன் பேப்பர் இருக்கா

சீன் பேப்பர் இருக்கா

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் தனக்கு சீன் பேப்பர், டயலாக் பேப்பர் என எதையுமே கொடுக்காமல், அண்ணா அப்படி வாங்கண்ணா.. இப்படி போங்கண்ணான்னு மட்டுமே சொன்னார். முதல் இரண்டு நாள் எனக்கு ஒண்ணுமே புரியல.. என லோகேஷின் சீக்ரெட்டை உடைத்து விட்டார்.

ஓ இதுதான் சீன்பேப்பரா

ஓ இதுதான் சீன்பேப்பரா

இந்நிலையில், தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கில் சீன்பேப்பரை முறைத்துப் பார்க்கும் படியான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள், ஓ இதுதான் சீன் பேப்பரா, விஜய் அண்ணா கிட்ட கொடுத்து ஷூட்டிங் பண்ணிடுவோம்னு லோகேஷ் கனகராஜ் நினைப்பது போல கமெண்ட்களை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

மேக்கிங் ஸ்டில்ஸ்

மேக்கிங் ஸ்டில்ஸ்

நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதியின் கிளைமேக்ஸ் சண்டை காட்சிகள் உள்ளிட்ட ஏகப்பட்ட மேக்கிங் ஸ்டில் புகைப்படங்களையும் மாஸ்டர் படக்குழு வெளியிட்டு வைரலாக்கி வருகிறது. மேலும், ஏதாவது டெலிடட் சீன்ஸ் இருந்தால் சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க ஆவலோடு வெயிட்டிங் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

விக்ரம் எப்போ

விக்ரம் எப்போ

உலக நாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து கமலை வைத்தே விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஆக்‌ஷன் திரில்லராக உருவாகும் இந்த படம் எப்போ வரும் என ரசிகர்கள் ரொம்பவே ஆவலோடு காத்திருக்கின்றனர். மே மாதத்திற்குள் விக்ரம் ரெடியாகி விடும் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.

மீண்டும் விஜய்யுடன்

மீண்டும் விஜய்யுடன்

தளபதி 66 படத்தை இயக்குநர் அட்லி அல்லது லோகேஷ் கனகராஜ் இருவரில் ஒருவர் தான் இயக்கப் போகிறார்கள் என்கிற தகவல்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இயக்குநர் அட்லி இயக்கத்தில் 3 படங்களில் விஜய் நடித்துள்ள நிலையில், லோகேஷ் உடன் மீண்டும் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X