ஒரே ஒரு புரமோ.. ஒட்டுமொத்த பாவனி ஆர்மி சண்டையும் க்ளோஸ்.. சும்மா வச்சு செய்யும் ரசிகர்கள்!
சென்னை: பாவனிக்கு எதிராக ராஜு மற்றும் சிபி பேசியதற்கு சமூக வலைதளங்களில் பாவனி ஆர்மியினர் மிகப்பெரிய புரட்சியை செய்த நிலையில், ஒரே ஒரு புரமோவை போட்டு ஒட்டுமொத்த சண்டையையும் விஜய் டிவி க்ளோஸ் செய்து விட்டதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
பாவனி பிக் பாஸ் வீட்டில் அபிநய் மற்றும் அமீர் உடன் நல்ல நட்போடு இருந்து வரும் நிலையில், அது காதலா? என்கிற கேள்வி பிக் பாஸ் வீட்டில் பூகம்பமாக வெடித்துள்ளது.
மனம் உடைந்து பாவனி நேற்று ஒரு புயலாக பொங்கி எழுந்ததும் பாவனி ஆர்மியினர் அதற்கு மேல் பொங்கி எழுந்த நிலையில், ஒட்டுமொத்தமாக அந்த பிரச்சனைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஒரே ஒரு புரமோ
ஒரே ஒரு புரமோ ஒட்டுமொத்த #WeStandWithPavni ஹாஷ்டேக்கும் க்ளோஸ்.. போய் புள்ளை குட்டிங்களை படிக்க வைங்க என மீம்களை போட்டு பாவனி ரசிகர்கள் நேற்று முழுக்க பண்ண போராட்டங்களை காமெடியாக மாற்றி விட்டனர்.

பாவனி ரசிகர்கள் பாவம்
பாவனிக்கு ஆதரவாக கொடி பிடித்து கோஷம் போட்டவர்கள் நிலைமை. வழக்கு எல்லாம் தொடர வேண்டும் என பிரச்சனை பண்ணவர்கள் பாவனி திடீரென பல்டி அடித்து சேர்ந்து விட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர் என பங்கம் செய்து வருகின்றனர்.

டேமேஜ் கன்ட்ரோல்
ராஜு பாயை டைட்டில் வின்னராக மாற்ற விஜய் டிவி பண்ண டேமேஜ் கன்ட்ரோல் தான் இந்த சமாதான டிராமா என பாவனி ரசிகர்கள் கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர். கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்து தனியாக பிக் பாஸ் ஏதாவது பஞ்சாயத்து பண்ணாரா? என்றும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

பாவனி அல்ல பச்சோந்தி
எம்மா.. நீ பாவனி.. இல்ல.. பச்சோந்தி மாதிரி பண்றியேம்மா.. பாவம் பாவனி ஆர்மி.... உன்ன நம்பி எப்படி தான் உனக்கு ஒட்டு போடுறாங்களோ என பாவனி ஹேட்டர்ஸ் கலாய்த்து வருகின்றனர். பாவனிக்கு ஒரு வழியாக உள்ளே பிரச்சனை தீர்ந்து விட்டால் போதும் எங்களுக்கு சந்தோஷம் தான் என பாவனி ஆர்மியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

பிரியங்கா தான் காரணம்
முடிந்து போன விஷயத்தை தனது அரசியல் சுயலாபத்திற்காக எடுத்து பேசி பிரச்சனையை கிளப்பியது பிரியங்கா தான் என்றும் பாவனி பிரியங்காவை விட்டு விலகி இருந்தாலே சந்தோஷமாக இருப்பார் என பிக் பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











