நாக்கை நீட்டி போஸ் கொடுத்த தளபதி 65 ஹீரோயின்.. டபுள் மீனிங்கில் கலாய்த்துத் தள்ளும் நெட்டிசன்ஸ்!

சென்னை: முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே மீண்டும் கோலிவுட்டுக்கு தளபதி 65 மூலம் வந்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் நாக்கை வெளியே நீட்டியபடி போஸ் கொடுத்துள்ள பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் போட்டோ வைரலாகி வருகிறது.

அந்த போட்டோவுக்கு கீழ் ஏகப்பட்ட நெட்டிசன்கள் டபுள் மீனிங்கில் கமெண்ட் அடித்து அவரை கலாய்த்து வருகின்றனர்.

தளபதி 65 ஹீரோயின்

தளபதி 65 ஹீரோயின்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவுள்ள தளபதி 65 படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார் பூஜா ஹெக்டே. மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர், மீண்டும் கோலிவுட்டில் பிரம்மாண்ட என்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார்.

பெரிய ஹீரோக்கள் படங்களில்

பெரிய ஹீரோக்கள் படங்களில்

டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் சமீப காலமாக முன்னணி நாயகியாக மாறி உள்ளார் பூஜா ஹெக்டே. டோலிவுட்டில் அல்லு அர்ஜுன், பிரபாஸ், மகேஷ் பாபு உள்ளிட்ட பெரிய நடிகர்கள் படங்களிலும் பாலிவுட்டில் அக்‌ஷய் குமார், சல்மான் கால் உள்ளிட்ட டாப் ஹீரோக்கள் படங்களிலும் நடித்து வரும் பூஜா ஹெக்டே, தமிழில் பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

நாக்கை நீட்டி

நாக்கை நீட்டி

இந்நிலையில், தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் நாக்கை நீட்டி இருக்கும் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்தை பதிவிட்டு தனது குறும்புத்தனத்தை வெளிப்படுத்தி உள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. அந்த போட்டோவை பார்த்த தளபதி ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.

டபுள் மீனிங் ட்ரோல்

டபுள் மீனிங் ட்ரோல்

நடிகை பூஜா ஹெக்டே நாக்கை நீட்டி க்யூட்டாக கொடுத்திருக்கும் போஸை பார்த்த சில விவகாரம் பிடித்த நெட்டிசன்கள் டபுள் மீனிங்கில் ஏகப்பட்ட மீம்களை போட்டு பங்கமாக கலாய்த்து வருகின்றனர். "நீங்களும் அதான் நினைச்சீங்களா.. அப்போ நான் நினைச்சது தப்பில்லையே" என விஐபி பட மீமை போட்டு வெறுப்பேற்றி வருகின்றனர்.

இது எப்படி இருக்கு

இது எப்படி இருக்கு

பூஜா ஹெக்டேவின் இந்த புகைப்படம் தீயாக பரவி வரும் நிலையில், ட்ரோல்களும் பயங்கரமாக வைரலாகி வருகிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான பிரம்மானந்தம் நாக்கை நீட்டி இருக்கும் போட்டோவை போட்டு, இதெப்படி இருக்கு என கிண்டல் செய்து வருகின்றனர்.

கலர்ஃபுல்

கலர்ஃபுல்

நடிகை பூஜா ஹெக்டே பிளாக் அண்ட் ஒயிட்டில் போட்ட புகைப்படத்தை கலர்ஃபுல்லாக மாற்றி ரசிகர்கள் வெளியிட்டுள்ள போட்டோவும் வைரலாகி வருகிறது. அழகு செல்லம் என்றும், தங்க தலைவி என்றும் செம க்யூட் என்றும் ரசிகர்கள் வர்ணித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

ஒரிஜினல் – காப்பி

ஒரிஜினல் – காப்பி

இன்னொரு பக்கம் ராஷ்மிகா ரசிகர்கள் ராஷ்மிகா தான் ஒரிஜினல் என்றும், பூஜா ஹெக்டே காப்பி என்றும் கம்பேரிசன் செய்து வருகின்றனர். மேலும், ராஷ்மிகா மந்தனா நாக்கை நீட்டியபடி க்யூட்டாக கொடுத்த போட்டோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர். டோலிவுட் சினிமாவில் தற்போது பூஜா ஹெக்டேவுக்கும் ராஷ்மிகாவுக்கும் இடையே தான் செம போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபாச கமெண்ட்ஸ்

ஆபாச கமெண்ட்ஸ்

பூஜா ஹெக்டேவின் இந்த போட்டோவை பார்த்த சில நெட்டிசன்ஸ் எல்லை மீறி சில ஆபாசமான கமெண்ட்டுகளையும், மோசமான போட்டோக்களையும் போட்டு வருகின்றனர். தளபதி 65 படத்தின் பூஜையில் கலந்து கொள்ளாத நடிகை பூஜா ஹெக்டே, வரும் மே மாதம் தான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X