பிரியங்கா கையிலே ஒரு வெத்தலைப் பொட்டியைக் கொடுத்துடுங்கடா.. பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை: பாவனி மற்றும் அமீருக்கு பாலமாக இருந்து லவ் செட் பண்ணி விடும் பிரியங்காவை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே அபிநய்க்கும் பாவனிக்கும் லவ் டிராக் ஓட்ட முயற்சித்து அது பெரும் பஞ்சாயத்தில் போய் முடிந்தது.

அடுத்ததாக அமீரை உள்ளே அனுப்பி லவ் டிராக்கை ஆரம்பித்துள்ளது பிக் பாஸ் டீம்.

வளர்ந்த குழந்தை

வளர்ந்த குழந்தை

குப்புற அடிச்சு விழுந்து சிரிக்கும் பிரியங்காவை பார்த்து வளர்ந்த குழந்தை என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் பாவனிக்கும் அமீருக்கும் இடையே பெரும் பாலமாக இருந்து லவ் டிராக்கை நடத்தி வருகிறார் பிரியங்கா என ஏகப்பட்ட நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

எடிட்டர் யாரு

எடிட்டர் யாரு

பாவனிக்கு தொடர்ந்து லவ் டிராக் மற்றும் காதல் பாடல்களை போட்டு ரசிகர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் கொஞ்சம் நஞ்சம் பெயரை கூட குழி தோண்டி புதைக்கும் அந்த எடிட்டர் யாருப்பா.. அவர் பேரு என்ன என பிக் பாஸ் ரசிகர்கள் மீம் போட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அபிநய் நல்லவன்

அபிநய் நல்லவன்

திருமணமான அபிநய் பாவனியுடன் நட்பாக கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேர் போட்டு பழகியதை காதல் என தப்பாக புரிந்து கொண்டு பாவனி அவர் பெயரையே கெடுத்து விட்டார். அபிநய் நல்லவன் அவனை விட்டுவிட்டு பாவனி அமீர் புதுசா வந்தவுடன் லவ் ஆமா கருமம் டா என கழுவி ஊற்றி வருகின்றனர்.

பாவனி ஆர்மி பாவம்

பாவனி ஆர்மி பாவம்

பாவனிக்காக வெளியே புரட்சி பண்ண பாவனி ஆர்மியின்ர் தான் ரொம்ப பாவம். பாவனி பண்ற கிரிஞ்ச் வேலைகளை எல்லாம் பார்த்தால் எல்லாத்துக்கும் காரணம் அவர் தான் என்றும் பாவனி பிக்பாஸ் வீட்டுக்குள் மேக்கப் போட்டே ஆட்களை மயக்கி இத்தனை நாட்கள் இருந்து வருகிறார் என கண்டபடி திட்டி வருகின்றனர்.

அடுத்தவங்க பெட்ரூம்

அடுத்தவங்க பெட்ரூம்

அடுத்தவன் பெட்ரூமை எட்டிப் பார்க்கக் கூடாதுன்னு கமல் சார் சொல்லிட்டு.. இப்படி அடுத்தவன் பெட்ரூம் விஷயங்களையே பிக் பாஸ் ஷோவில் காட்டுறீங்களே இதெல்லாம் உங்களுக்கே ஓவராக தெரியவில்லை என விஜய் டிவியையும் உலக நாயகனையும் சேர்த்தே கலாய்த்து வருகின்றனர்.

வெத்தலப்பொட்டி

வெத்தலப்பொட்டி

அந்த பிரியங்கா கையிலே ஒரு வெத்தலப் பொட்டியைக் கொடுத்துடுங்கடா. கேரக்டர், கரெக்ட்டா மேட்ச் ஆவும் என்றும் கான்ட்ராக்டர் நேசமணிக்கு பதிலாக செட்டப் செல்லப்பா கேரக்டர் பிரியங்காவுக்கு கொடுத்தால் ரொம்பவே பொருத்தமாக இருக்கும் என பிரியங்காவை வச்சு செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X